குவைத் நாட்டில் தவிக்கும் தமிழர்கள் மீட்கப்படுவரா?| Dinamalar

குவைத் நாட்டில் தவிக்கும் தமிழர்கள் மீட்கப்படுவரா?

Added : ஜூன் 03, 2020 | |
காட்டுமன்னார்கோவில்; 'குவைத் நாட்டில் சிக்கித் தவிக்கும், தமிழக தொழிலாளர்களை மீட்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அவர்களது உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.மேற்காசிய நாடான குவைத்தின், பரோனியா மாகாணத்தில் உள்ள, கே.ஜி.எல்., மோட்டார் நிறுவனத்தில், தமிழகத்தைச் சேர்ந்த, 257 பேர் வேலை செய்கின்றனர். ஊரடங்கு காரணமாக, மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.

காட்டுமன்னார்கோவில்; 'குவைத் நாட்டில் சிக்கித் தவிக்கும், தமிழக தொழிலாளர்களை மீட்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அவர்களது உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேற்காசிய நாடான குவைத்தின், பரோனியா மாகாணத்தில் உள்ள, கே.ஜி.எல்., மோட்டார் நிறுவனத்தில், தமிழகத்தைச் சேர்ந்த, 257 பேர் வேலை செய்கின்றனர். ஊரடங்கு காரணமாக, மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. தினமும், இரண்டு வேளை உணவு மட்டும் வழங்குகின்றனர்.நிலுவை சம்பளம் வழங்காமலும், சொந்த ஊருக்கு அனுப்பவும் மறுத்து வருகின்றனர்.

மாறாக, விசாவை ரத்து செய்து விடுவதாக மிரட்டுவதாக, தொழிலாளர்கள் கூறுகின்றனர்.அவர்களது உறவினர்கள் கூறுகையில், 'வெளிநாட்டில் உள்ள தமிழர்களை, சொந்த ஊருக்கு அழைத்து வர, வருவாய்த்துறை மூலம், அனைத்து கிராமங்களிலும் கணக்கெடுப்பு நடந்தது.'அதன் பின், அந்த நடவடிக்கையை தமிழக அரசு கைவிட்டுள்ளது. தமிழக தொழிலாளர்களை குவைத் நாட்டில் இருந்து மீட்க, முதல்வர்நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X