புதுடில்லி:நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டில்லியில் நேற்று நடந்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது:
விவசாயிகளின் நலனுக்காக 'ஒரு நாடு ஒரே சந்தை'யை ஏற்படுத்தும் வகையில் அத்தியாவசிய பொருட்களுக்கான சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது. இதன் மூலம் விவசாயிகளின் பணிகள் எளிமையாக்கப்படுவதோடு அவர்களின் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும். நாட்டுக்கு 1947ல் சுதந்திரம் கிடைத்தது. இந்த சட்ட திருத்தம் மூலம் விவசாயிகளுக்கு இன்று சுதந்திரம் கிடைத்துள்ளது.
மேலும் மேற்கு வங்கத்தில் உள்ள கோல்கட்டா துறைமுகத்தை ஷியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகம் என பெயர் மாற்றம் செய்ய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது, என்றார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது 'டுவிட்டர்' சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டு உள்ளதாவது:விவசாய துறையில் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த சீர்த்திருத்தங்கள் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளன. இதன் வாயிலாக இத்துறையில் மிகப் பெரிய மாற்றங்கள் நிகழ இருக்கின்றன.'ஒரே இந்தியா ஒரே விவசாய சந்தை' உருவாக இந்த சட்டதிருத்தம் வழிவகுக்கும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE