அரசியல் செய்தி

தமிழ்நாடு

கருணாநிதியின் 97வது பிறந்த நாள் ஸ்டாலின், கனிமொழி நினைவஞ்சலி

Updated : ஜூன் 04, 2020 | Added : ஜூன் 04, 2020 | கருத்துகள் (35)
Share
Advertisement
கருணாநிதி, பிறந்த நாள், ஸ்டாலின், கனிமொழி நினைவஞ்சலி

சென்னை; மறைந்த கருணாநிதியின், 97வது பிறந்த நாளை ஒட்டி, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், மகளிர் அணி செயலர் கனிமொழி, சமூக வலைதளங்களில், அவரது நினைவுகளை பகிர்ந்தனர்.

ஸ்டாலின்: உங்கள் குரலும், குரலின் உங்கள் உணர்ச்சியும், நாள்தோறும், நாளின் நொடிதோறும் என்னை வழிநடத்துகிறது. எம்மை வாழ்வாங்கு வாழவைத்து கொண்டிருக்கிறது. மேடைக்கு போனால், எல்லாரையும் வெல்லும் குரல், உங்களுடையதாகத் தான் இருக்கும். எழுதிக் காட்டினால் எல்லாருடைய எழுத்தையும் மிஞ்சி, உங்கள் எழுத்து விண் உயர்ந்து நிற்கும். அரசியலில் மட்டுமா, நீங்கள் ஆட்சி செய்தீர்கள். இலக்கியத்தையும் எங்கே விட்டு வைத்தீர்கள்.

இலக்கியம் மட்டுமா, திரையுலகில் உங்கள் தமிழ் ஆட்சியும், மாட்சியும் மறையாது. நுாற்றாண்டை நெருங்குகிறது, உங்கள் வயது. பலப்பல நுாற்றாண்டுகள் பரவியிருக்கும் உங்கள் புகழ்.கனிமொழி: ஒரு நாள், அறிவாலயத்தில், கருணாநிதி அறையில் நின்று கொண்டிருந்தேன். அப்போது, ஒரு பெரியவர், கருணாநிதியை பார்த்து, 'எப்படி இருக்க... என்னை உனக்கு ஞாபகம் இருக்கா' என்றபடியே உள்ளே நுழைந்தார்.

அவரது தொனியில், 'நீ கட்சி தலைவராயிட்ட; முதல்வரு வேற ஆயிட்ட; உனக்கெப்படி என்னை எல்லாம் நினைவு இருக்கும்' என்ற எள்ளல் ததும்பி வழிந்தது.சுற்றி நின்றவர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சி. பெரியவர், அடுத்து என்ன சொல்லப் போகிறாரோ என்ற எச்சரிக்கை பற்றிகொண்டது. ஒரு இறுக்கம்.தலைவர் முகத்திலோ, ஒரு மந்தகாசப் புன்னகை பூத்தது. கறுப்பு கண்ணாடிக்குள்ளும் கண்களில் படர்ந்த குறும்பு தெரிந்தது. 'ஏன் ஞாபகம் இல்ல...' என, அவர் பெயர் சொல்லி அழைத்தார்.

'பார்த்துப் பல வருடம் ஆயிடுச்சு' என்றார். அடுத்து கருணாநிதி, 'நான் போன வாரம் கூட, உங்க ஊருக்கு பொதுக்கூட்டத்துக்கு வந்தேனே; உன்ன கூட்டத்தில் தேடிப் பார்த்தே; நீ வரலயே' என்றார். அதற்கு, அந்த பெரியவர் கொஞ்சம் நெளிந்தார். 'இல்ல, என் மகளோட கணவர் வீட்ல, ஒரு உறவுக்காரர் இறந்துட்டார். அங்க போகும்படி ஆயிடுச்சு. நீ வந்தப்ப இல்லயேன்னு தான் பார்க்க வந்தேன்' என்றார்.

ஒரு தலைவருக்கும், தொண்டனுக்குமான உரையாடல் இது. அப்பா, உங்களை ஒரு தலைவனாகவும், தந்தையாகவும் பெற்றது, மறுபிறவியற்ற இந்த வாழ்க்கையின் பெரும் பேறு. இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
unmaitamil - seoul,தென் கொரியா
05-ஜூன்-202000:24:04 IST Report Abuse
unmaitamil இந்த திமுக, திக டூமில்ஸ் என்னமா கத விடுகிறார்கள். தாங்க முடியவில்லை ........ என்னமோ இவர்கள்தான் தீண்டாமையை ஒழித்த மாதிரியும், தாழ்த்தப்பட்டவர்களையும், பிற்படுத்தப்பட்டவர்களையும் முன்னேற்றிய மாதிரியும் அண்டப்புளுகு புளுகிறார்கள். அம்பேத்கார் , கக்கன் , K.R.நாராயணன் போன்ற எத்தனையோ தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்தவர்கள் இந்த ஏமாற்றுக்காரர்கள் அரசியலுக்கு வரும் முன்பே சமுதாயத்தில் உயந்த நிலையை அடைந்தவர்கள். முகவின் தனிப் பெருமைகள் : ஊழல் (ஊழலின் தந்தை), மக்களுக்கு குடியை கொடுத்து அவர்தம் குடியை கெடுத்தது, கட்ட பஞ்சாயத்து தொடங்கி வைத்தது , ஜாதி பிரிவினை மத பிரிவினையை வளர்த்தது, பல மனைவி கொள்கையை உண்டாக்கியது, நம்பிய இரண்டு லட்சம் இலங்கை தமிழர்களை கூண்டோடு அழித்தது, சொந்த மகளை என் மகள் அல்ல, யாரென்றே தெரியாது என நீதிமன்றத்தில் சத்தியம் செய்த உலகின் ஒரே தந்தை என்று யாரும் அடைய முடியாத பெருமை அடைந்தது , இந்து கடவுள்களை நின்தித்துவிட்டு மனைவி துணைவியை கோவில்களுக்கு அனுப்பி ஊரையே ஏமாற்றியது, தமிழால் பிழைத்து அந்த தமிழையே அழித்தது .... இப்படி பல பல பெருமையின் நாயகன் தமிழகத்தின் தீய சக்தி நாயகனே .
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
04-ஜூன்-202021:47:38 IST Report Abuse
ஆரூர் ரங் கற்சிலை கேட்டதா பிரசாதமும் பாலும் தேனும் என மேடைக்கு மேடை முழங்கிய கும்பல் இப்போ உயிரற்ற சமாதிக்கு மாலைபோட்டு பூத்தூவி தயிர்வடை வைக்கிறது. இந்தக் கூட்டத்தால் நம்பி ஏமாறும் டூமீல்ஸ் சிந்திக்க
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
04-ஜூன்-202021:33:31 IST Report Abuse
blocked user போட்டோவுக்கு மாலை போட்டால், சூடம் கொளுத்தினால் அது பகுத்தறிவு..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X