அரசியல் செய்தி

தமிழ்நாடு

கருணாநிதி நினைவிடத்தில் தொண்டருக்கு திருமணம்

Added : ஜூன் 04, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement

சென்னை; முன்னாள் முதல்வர் கருணாநிதியின், 97வது பிறந்த நாளை ஒட்டி, அவரது நினைவிடத்தில், கட்சி தொண்டருக்கு, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்தார்.

கருணாநிதி பிறந்த நாளை ஒட்டி, சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள, அவரது நினைவிடத்தில், ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு, கனிமொழி, உதயநிதி உள்ளிட்டோர், நேற்று, மலர் துாவி மரியாதை செலுத்தினர்.நினைவிடத்தில், தி.மு.க., தொண்டர் அசோக்குமார் - மகாலட்சுமி திருமணத்தை நடத்தி வைத்து, மணமக்களுக்கு, ஸ்டாலின் பரிசுகள் வழங்கினார்.

மாவட்ட செயலர் சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். சென்னையில், கோபாலபுரம் இல்லம், சி.ஐ.டி., காலனி இல்லம், அறிவாலயம், முரசொலி அலுவலகம் ஆகிய இடங்களில், மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்ட, அவரது படத்திற்கு, ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

அறிவாலயத்தில் உள்ள, கருணாநிதியின் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த, அவரது படத்திற்கு ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, மலர் துாவி மரியாதை செலுத்தினார்.தமிழகம் முழுதும் ஏழை, எளியோருக்கு, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, கருணாநிதியின் பிறந்த நாளை, தி.மு.க.,வினர் எளிமையாக கொண்டாடினர்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
06-ஜூன்-202004:29:25 IST Report Abuse
Matt P உலகத்தில எந்த நாட்டிலயும் சமாதியின் முன் திருமணம் நடந்ததாக வரலாறு இருக்காது. இனிமேலும் நடக்குமா எனது சந்தேகமே. இது கின்னஸ் புத்தகத்துக்கு பரிந்துரைக்கப்பட வேண்டிய ஓன்று. எல்லோரும் கோயிலில் கிறித்தவர் இந்துக்கள் உட்பட திருமணம் நடத்துவார்கள். இவரே தெய்வம் புதைக்கப்பட்ட இடமே கோயில் கட்சியே மதம் என்று இருப்பவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? அண்ணாதுரை சமாதி முன் ஏன் திருமணம் நடத்தவில்லை? அவரும் கடவுள் தானே திமுக குல வழக்கப்படி.
Rate this:
Cancel
Kannan - Ramanathapuram,இந்தியா
05-ஜூன்-202019:16:46 IST Report Abuse
Kannan பாவம்... வாழ வேண்டிய மண மக்கள்..
Rate this:
Cancel
S....lai - CIT ,இந்தியா
04-ஜூன்-202014:45:28 IST Report Abuse
S....lai இவர்கள் பகுத்தறிவாளர்கள் குறிப்பாக அறிவற்றவர்கள் , திருமணம் திராவிட பரம்பரியத்தின்படி இடுகாட்டில் , கல்லறையில் , பிணத்தின்முன் நடப்பது தான் பெரியார் , அண்ணா , கருணாநிதி , கி.வீரமணி கண்ட பகுத்தறிவு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X