புதுடில்லி:ஊரடங்கு விலக்கி கொள்ளப்பட்டு வரும் நிலையில் குறிப்பிட்ட சில வெளிநாட்டவர் நம் நாட்டுக்கு வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுஉள்ளது. குறிப்பாக தொழில் அதிபர்கள் மருத்துவத் துறை நிபுணர்கள் விஞ்ஞானிகள் தொழில்நுட்பத் துறையினருக்கு இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதையடுத்து வெளிநாடுகளைச் சேர்ந்தோர் நம் நாட்டுக்குள் வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஊரடங்கு காலத்தின்போது பல்வேறு நாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்கள்'வந்தே பாரத்' என்ற பெயரில் அழைத்து
வரப்பட்டனர். அப்போதும் வெளிநாட்டவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
நான்கு கட்ட ஊரடங்கு முடிந்த நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. அதன்படி உள்நாட்டு விமான சேவையும் குறிப்பிட்ட சில மார்க்கங்களில் துவங்கியுள்ளது. இந்த
நிலையில் குறிப்பிட்ட சில பிரிவு வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் நம் நாட்டுக்குள் வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி கீழ்க்கண்ட வெளிநாட்டவர் மட்டும் பயணம் மேற்கொள்ள அனுமதி
வழங்கப்படுகிறது:
* விளையாட்டுப் பிரிவினருக்கு வழங்கப்படும் பி -3 விசாவைத் தவிர மற்ற தொழில் முறை விசா மூலம் பயணம் செய்யும் தொழிலதிபர்கள் அனுமதிக்கப்படுவர்
* நம் நாட்டில் உள்ள மருத்துவப் பரிசோதனை மையங்கள், ஆலைகள்உள்பட மருத்துவத் துறைக்கான தொழில்நுட்ப சேவைக்கு வரும் மருத்துவத் துறை நிபுணர்கள் மருத்துவ
ஆராய்ச்சியாளர்கள், இன்ஜினியர்கள், தொழில்நுட்ப நிபுணர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
இதற்கு பதிவு செய்யப்பட்டஇந்திய நிறுவனங்கள் பல்கலைகள் உள்ளிட்டவற்றில் இருந்து முறையான அழைப்பு இருக்க வேண்டும்
* இந்தியாவில் உள்ள வெளிநாட்டு தொழில் நிறுவனங்களுக்கான பணி அல்லது சேவைக்காக வெளிநாட்டு இன்ஜினியர்கள் நிர்வாகிகள் வடிவமைப்பு அல்லது இதர நிபுணர்கள் வரலாம்.
உற்பத்தி துறை வடிவமைப்பு துறை கம்ப்யூட்டர் மென்பொருள் தகவல் தொழில்நுட்ப
நிறுவனங்கள் வங்கி உள்ளிட்ட நிதி நிறுவனங்களுக்கு இது பொருந்தும்
* இந்தியாவில் உள்ள நிறுவனத்தின் அழைப்புக்கு ஏற்ப இந்தியாவில் இயந்திரங்களை
நிறுவுவதற்கு அதன் பராமரிப்புக்காக வெளிநாட்டு தொழில்நுட்ப நிபுணர்களுக்க அனுமதி அளிக்கப்படும்.
இவ்வாறு வரும் வெளிநாட்டவர்கள் ஏற்கனவே தொழில் விசா உள்ளிட்டவற்றை பெற்றுஇருந்தாலும் அதை அந்தந்த நாடுகளில் உள்ள இந்தியத் துாதரகங்களில் புதுப்பித்து கொள்ள வேண்டும். நீண்டகால விசா உள்ளவர்களும் இந்தியத் தூதரகங்களில் அதை புதுப்பித்து கொள்ள வேண்டும்.இவ்வாறு உள்துறை அமைச்சக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE