பொது செய்தி

தமிழ்நாடு

மின் கட்டணம் செலுத்த

Added : ஜூன் 04, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

சென்னை; வீடுகளை உள்ளடக்கிய தாழ்வழுத்த நுகர்வோர், மின் கட்டணத்தை, அபராதம் இன்றி செலுத்த, மின் வாரியம், அவகாசம் வழங்கியுள்ளது.

இதுகுறித்து, மின் வாரியம் அறிவிப்பு:சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் வசிக்கும் தாழ்வழுத்த நுகர்வோரில், மார்ச், 25ம் தேதி முதல் ஜூலை, 5ம் தேதி வரை, மின் கட்டணம் செலுத்த, கடைசி தேதி உள்ளவர்கள், ஜூலை, 6ம் தேதி வரை, தாமத மற்றும் மறு மின் இணைப்பு கட்டணமின்றி செலுத்தலாம்.கால நீட்டிப்பு இல்லைமற்ற மாவட்டங்களில் உள்ள தாழ்வழுத்த நுகர்வோரில், கட்டணம் செலுத்த கடைசி தேதி, மார்ச், 25 முதல் வரும், 14ம் தேதி வரை இருப்பின், அவர்கள், வரும், 15ம் தேதி வரை, தாமத கட்டணமின்றி செலுத்தலாம். அம்மாவட்டங்களில் வசிப்போர், மின் கட்டணம் செலுத்த கடைசி தேதி, வரும், 15 மற்றும் அதற்கு பின் இருப்பின், கடைசி தேதிக்குள் கட்டணம் செலுத்த வேண்டும்; கால நீட்டிப்பு வழங்கப்பட மாட்டாது.15ம் தேதிபெரிய தொழிற்சாலைகளை உள்ளடக்கிய, அனைத்து உயரழுத்த நுகர்வோர்களை பொருத்தவரை, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாத கட்டணத்தை செலுத்தாமல் இருப்பின், வரும், 15ம் தேதிக்குள் செலுத்தலாம். அவர்களுக்கு, மின் துண்டிப்பு, மறு இணைப்பு கட்டணம் வசூலிக்கப்படாது. மே மாத மின் கட்டணத்தை, நுகர்வோர், அதற்கான குறிப்பிட்ட கெடு தேதிக்குள் செலுத்த வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
04-ஜூன்-202019:45:14 IST Report Abuse
Bhaskaran அதெப்படிங்கோ அவங்க சரியாக அறுபதுநாளைக்கு ஒரு முறை கணக்கீடு எடுக்கறதுக்கிடையாது அவர்களுக்கு வரும் மேல் வருமானத்தை கெடுக்கறீங்களே
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
04-ஜூன்-202009:46:14 IST Report Abuse
spr சிறப்பான செய்தியே பாராட்டுவோம் கொரோனா ஊரடங்குத் தடையால் வீட்டை விட்டு வெளியூர் மற்றும் அவரவர் வாழ்ந்த இடம் விட்டு வெளியே சென்றவர்கள் பலர் இன்னமும் வீடு திரும்பாத நிலையில், அவரவர் வீட்டு மின்சார பயனீட்டுக் கணக்கெடுக்க துறை அதிகாரிகள் வரும் பொழுது வீடு பூட்டியே இருக்கும் எனவே பயன்பாட்டில் இல்லாத போதும் முந்தைய மாத அடிப்படையில் பணம் கட்டுவது, அவர்களுக்கு இழப்பே. எனவே மின்சார பயன்பாட்டை எத்தனை யூனிட் என்று அவரவர் ஆன்லைனில் மின்சேவை இணையத்தில் பதிவு செய்து அதற்கேற்றபடி கட்டணம் செலுத்த வசதி செய்து கொடுத்தால் மிகவும் நல்லது. ஏறக்குறைய 70 முதல் 80 விழுக்காடு மக்கள் நேர்மையாகவே பயனீட்டுக் கணக்கை சுட்டிக் காட்டுவார்கள் இரண்டு மூன்று மாதங்களுக்கொரு முறை நேரடி ஆய்வு செய்தால் தவறான கணக்கை காட்டினாலும், அதிகக் கட்டணமே கட்ட வேண்டியிருக்கும் என்பதால் தவறு நிகழ வாய்ப்புக்கள் குறைவு. அரசு சிந்திக்குமா? இதனால் கணக்கெடுக்க நபர் வீடு வீடாகச் செல்ல வேண்டாம் அந்த வகையில் கொரோனா தொற்றும் குறைய வாய்ப்புள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X