பொது செய்தி

தமிழ்நாடு

விழிப்புடன் இருப்போம்; வீழ்த்திடுவோம்

Updated : ஜூன் 04, 2020 | Added : ஜூன் 04, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
உலகளாவிய சர்வதேச நோய் பரவலில் இருந்து உலக சமுதாயம் பாதிப்பு அடைந்த பின் மீண்டு வந்த கதையை கடந்த கால அரிய நுால்களில் இருந்து உங்களுக்கு சிலவற்றை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.17 முதல் 19ம் நுாற்றாண்டு வரை உலகளாவிய கொடும் நோய்களால் நுாறு கோடி மக்கள் இறந்திருப்பர். 1900 முதல் 120 ஆண்டுகளில் உலகளாவிய சர்வதேச பரவல் நோய்களை நாம் தெரிந்து கொள்வோம்.நோய்களின் விபரம்*1915- 1926 வரை
விழிப்புடன் இருப்போம்; வீழ்த்திடுவோம்

உலகளாவிய சர்வதேச நோய் பரவலில் இருந்து உலக சமுதாயம் பாதிப்பு அடைந்த பின் மீண்டு வந்த கதையை கடந்த கால அரிய நுால்களில் இருந்து உங்களுக்கு சிலவற்றை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

17 முதல் 19ம் நுாற்றாண்டு வரை உலகளாவிய கொடும் நோய்களால் நுாறு கோடி மக்கள் இறந்திருப்பர். 1900 முதல் 120 ஆண்டுகளில் உலகளாவிய சர்வதேச பரவல் நோய்களை நாம் தெரிந்து கொள்வோம்.

நோய்களின் விபரம்

*1915- 1926 வரை 'என்சிபாலிட்டிஸ்' மூளை வீக்க நோய் பாதித்து 15 லட்சம் பேர் இறந்தனர்

l 1918- 1920 வரை ஸ்பானிஷ் ப்ளு நோயால் 5 கோடி பேர் இறந்தன

ர்l 1957ல் ஆசிய இன்புளுவென்சா நோய்க்கு 10 லட்சம் பேர் இறந்தனர்

l 1968ல் ஹாங்காங் காய்ச்சலால் 40 லட்சம் பேர் இறந்தனர்l 1977ல் பறவை காய்ச்சல் நோய் துவங்கியது\

l2002ல் 'சார்ஸ்' என்ற கடுமையான சுவாச நோய் தொற்று ஏற்பட்டு 800 பேர் இறந்தனர்

l2009ல் பன்றி காய்ச்சலால் 6 லட்சம் பேர் இறந்தனர்

l2009 முதல் இன்று வரை 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை தாக்கும் 'மம்ப்ஸ்' வைரசால் 1.42 லட்சம் குழந்தைகள் இறந்தனர்l

2012 முதல் 'மெர்ஸ்' என்ற மத்திய கிழக்கு சுவாச நோய், கொரோனா தொடர்புடைய வைரஸ் தொற்று பரவியது. இதற்கு ஒட்டக காய்ச்சல் என்ற பெயரும் இருந்தது

l 2013 - 16 வரை எபோலா வைரசால் 16 ஆயிரம் பேர் இறந்தனர்

l 2015 - 16 வரை ஜிகா வைரசால் 50 பேர் இறந்தனர்l 2019ல் சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரசால் இதுவரை 3.5 லட்சம் பேர் இறந்துள்ளனர்.

உலக மக்களை கொன்று குவித்தநோய்கள்

l 1877 - 1977 பெரியம்மைக்கு 25 கோடி பேர் இறந்தனர்.

l காலரா,1817 முதல் உலக முழுவதும் சுழற்சி முறையில், இதுவரை 7 முறை தாக்கியுள்ளது. ஒவ்வொரு முறை வரும் போதும் 10 முதல் 15 ஆண்டுகள் வரை நீடித்துள்ளது. 50 லட்சம் பேர் இறந்துள்ளனர்.

கடைசியாக காலரா நோய் தொற்றுக்கு 2016 - 2019 வரை ஏமன் நாட்டில் 4,000 பேர் இறந்துள்ளனர்

lமலேரியா நோயால் 2017 கணக்கின் படி ஆண்டிற்கு 5 லட்சம் பேர் இறந்து உள்ளனர்

l1980 முதல் எய்ட்ஸ்க்கு 4.5 கோடி பேர் இறந்துள்ளனர்l காசநோய்க்கு உலகளவில் 2018 கணக்கெடுப்பு படி ஆண்டுக்கு 15 லட்சம் பேர் இறக்கின்றனர். அதில் சராசரியாக 4,109 பேர் தினமும் இறக்கின்றனர்.இந்தியாவில் மட்டும் ஆண்டிற்கு 2.5 லட்சம் பேர் இறக்கின்றனர்; தினமும் 694 பேர் இறக்கின்றனர்

2009 - -2018 வரை மம்ப்ஸ் வைரசால் 1.42 லட்சம் குழந்தைகள் இறந்துள்ளனர்.இவ்வளவு பெரிய நோய்களை சந்தித்த நம் முன்னோர் தப்பிக்க என்ன செய்தனர் என்று பார்ப்போம்.

பரவுதலை கட்டுப்படுத்துதல்

சுற்றுப்புறச்சூழலை சிறந்ததாக்கி நம் உடலை நோய் அணுகாமல் தடுக்கும் சில வழிமுறைகளை கடைப்பிடித்தாலே ஆரோக்கியமான வாழ்வைப் பெறலாம்.அதற்கான வழிமுறைகளில் மிக முக்கியமானது கை கழுவுவது.பழங்காலத்தில் வெளி இடங்களுக்குச் சென்று வருபவர்கள் கை, கால்களை சுத்தம் செய்து பிறகே வீட்டிற்குள் நுழைவர். ஆனால் அந்தப் பழக்கம் தற்போது மறைந்து விட்டது.

வெளியே செல்லும் போது முகக்கவசம் அணிவது அவசியம். சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும். கைகுலுக்குவதை முற்றிலும் தவிர்க்கவும்.கொரோனாவுக்கு தடுப்பு மருந்து தயாரிக்க நீண்ட நாட்கள் ஆக வாய்ப்பு உள்ளது.கைவசம் இருக்கும் மருந்துகளை வைத்து, மருத்துவரின் ஆலோசனைப்படி உயிர் காத்துக் கொள்ளுங்கள்.

எதிர்காலம்

எய்ட்ஸ்க்கு 1980-1990ல் ஆப்பிரிக்காவில் 20-40 வயது வரை பல லட்சம் பேர் இறந்தனர். 2004ல் உலகம் முழுவதும் ஆண்டுக்கு 17 லட்சம் பேர் இறந்தனர்.

2010ல் 12 லட்சமாக இறப்பு குறைந்தது.2018ல் 7.70 லட்சமாக குறைந்தது. இதற்கு தடுப்பு, மற்றும் தற்காப்பு முறைகள் நிறைய உள்ளன. ஆனால் குணப்படுத்த மருந்து இன்னமும் கண்டுபிடிக்க வில்லை. இதற்கு இரண்டு டஜன் ஆன்டிரெட்ரோ வைரல் மருந்துகள் இருக்கின்றன.இந்த மருந்து எச்.ஐ.வி., வைரஸை நேரடியாகத் தாக்குவதால் அவை வைரசின் தன்னை நகலெடுக்கும் திறனை முடக்குகின்றன.

நோய் இருக்கிறதா இல்லையா என்று தீர்மானிப்பது மனிதனின் மூளைக்குள் இருக்கும் சிந்தனையின் அளவை பொறுத்தே அமையும்.அந்த நோயின் முக்கியத்துவமும், முக்கியத்துவம் இன்மையும் சிந்தனையின் அளவை பொறுத்தே அமைந்திருப்பதை கடந்த கால நோய்களின் வரலாறு நமக்கு தெரிவிக்கிறது. ஏன் என்றால் நாம் கடந்து வந்த பாதையை புரட்டி பாக்கும் போது மலேரியாவால் இறந்த மக்கள் தொகை 100 கோடியாக இருக்கும்.காலராவால் மட்டுமே பல லட்சம் மக்கள் இறந்துள்ளனர்.

காசநோய் ஒரு மாற்ற முடியாத நோயாக இருக்கிறது. காலரா தடுப்பு மருந்து இருந்தாலும் கடந்த பத்து ஆண்டுகளில் எத்தியோப்பியா, ஈராக், வியட்நாம், இந்தியா, ஜிம்பாப்வே, ஹெய்டி 2016க்கு பிறகு ஏமனில் மட்டும் இதுவரை 4000 பேர் இறந்துள்ளனர்.மம்ப்ஸ், தட்டம்மை, ரூபெல்லா போன்ற நோய்களுக்கு தடுப்பு ஊசி இருந்தாலும் நோய் பரவலை தடுப்பது சவாலாகவே இருக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளில் மம்ப்ஸ் உலகம் முழுவதும் பரவி இருப்பதை உணரமுடிகிறது. தட்டம்மை அதே போல காங்கோ, வியட்நாம், நியூஸிலாந்து, பிலிபைன்ஸ், மலேசியா போன்ற நாடுகளில் இன்றும் உள்ளது.9,000 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட காசநோய் இன்னமும் நம்முடன் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. நுரையீரலை மட்டுமே தாக்கும் இந்த நோய் காற்றின் மூலமாக ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவுகிறது.

6 முதல் 9 மாதம் வரை மருந்துகள் ஒரு நாள் தவறாமல் உட்கொண்டால் குணப்படுத்த முடியும். காசநோயுடனும் சேர்ந்து வாழ பழகி விட்டோம்.மேற்கண்ட அனைத்து நோய்களையும் கடந்து வந்தோம் நாம். ஆனால் மனித மூளை இந்த நோய்களை பற்றி சிந்திக்க அதிக இடம் நமக்கு கொடுக்கவில்லை. ஆனால், கொரோனாவில் இழந்தவர்களை விட நாம் இழந்த மக்கள் தொகை பல மடங்கு அதிகம். எனவே மனித மூளை எதை முக்கியத்துவப்படுத்துகிறது என்பதை பொறுத்தே அந்த நோய்கள் குறித்து அவர்களிடம் அச்சம் அமைந்திருந்ததை, கடந்த கால வரலாறு நமக்கு காட்டுகிறது.

நாம் கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும். சமீபத்திய சர்வதேச மருத்துவ ஆய்வக ஆய்வுகளை பின்பற்றினால் மட்டுமே விடை கிடைக்க வாய்ப்பு உண்டு என்று நம்புவோம்.1918ல் ஸ்பானிஷ் காய்ச்சல் குறித்து மக்களை எச்சரிக்க எந்த தொழில்நுட்பமும் இல்லை. அரசாங்கத்திற்கு மூன்று வழிகள் இருந்தன. அவை தினசரி செய்தித்தாள்கள், செய்தியை வழங்க ஒரு துாதர், விழிப்புணர்வை ஏற்படுத்தும் துண்டு பிரசுரம், விளம்பரம், சுவரொட்டி பயன்படுத்தப்பட்டது.அந்த காலத்தில் கை குலுக்குதல் இல்லை; அரவணைப்புகள் இல்லை.

கடந்த, 1920 ஆரம்பத்தில் வானொலி அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது. 1945ம் ஆண்டில் ஸ்பானிஷ் காய்ச்சல் தடுப்பூசியின் அங்கீகரிக்கப்பட்ட பதிப்பு ராணுவ வீரர்களுக்கும், பின் அமெரிக்க மக்களுக்கும் வழங்கப்பட்டது.மருத்துவமனைகள், பிற சுகாதார நிலையங்களுக்கு இடையே தகவல் தொடர்பு இல்லாததால் அமெரிக்கா முழுவதும் தடுப்பூசி அடைய ஒரு ஆண்டு ஆனது. அந்த நேரத்தில் காய்ச்சல் சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை.

இது ஒரு வைரஸால் அல்ல; பாக்டீரியாவால் ஏற்பட்டது என்று பலர் நம்பினர்.விஞ்ஞான வளர்ச்சியின் புதிய நவீன சகாப்தத்தில் ஒரே தொடர்பில் தொடர்பு கொண்ட மக்கள் விரல் நுனியில் எல்லா விஷயங்களையும் அறியும் திறன் கொண்ட மக்கள் இன்று சுய சிந்தனை திறனை இழந்தனர். மேலும், இந்த தொற்று நோயிலிருந்து அவர்களைக் காப்பாற்ற அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை.

கொரோனா நம் ஸ்மார்ட்போனை விட மனிதர்களை துார விலகி இருக்க செய்திருக்கிறது.கடந்த வரலாற்றை பார்க்கும் போது நம் முன்னோர்கள் மிக கச்சிதமாக விட்டு சென்றவை:

lஉடம்பை வலுப்படுவதன் மூலமாக கைவசம் இருக்கும் மருந்துகளை பயன்படுத்தி தப்பிக்க முயற்சி எடுப்போம். இன்று கொரோனாவால் மிகக்குறைந்த அளவே மக்கள் இறக்கின்றனர்

lதடுப்பு மருந்து வந்தால் இந்த நோயை வீழ்ச்சியடைய செய்யலாம்lதனிமை படுத்தல், கை கழுவுதல், சமூக இடைவெளி கடைபிடித்தால் நோய் பரவாமல் தடுக்க சிறந்த வழியாக இருக்கும்.1918ல் நடந்த ஆய்வுகளில், வைரஸ் பரவுதல் கட்டுக்குள் கொண்டு வர பின்பற்றப்பட்ட ஒரே ஒரு வழி சமூக விலகல் மட்டுமே.

ஒரு நுாற்றாண்டுக்கு பின் கூட இதுவே உண்மையாக உள்ளது.நாம் மருந்துக்கு காத்திருந்தால் நம் பொருளாதாரம் மரணமடைந்து விடும். பொருளாதாரம் மரணமடைந்தால் நாம் பட்டினியால் மரணமடைந்து விடுவோம். எனவே தான் நாம் காத்திருக்க வேண்டிய நேரம் இல்லை. இப்போது வாழ்க்கையை மறுபடியும் கொண்டு வரவேண்டும் என்று கடைகளை திறக்க ஆரம்பித்துள்ளனர்.

இந்த நோய் இன்னமும் எத்தனை காலம் தொடரும் என்று சிந்தித்தால் சமுதாயம் இது முடிந்து விட்டது என்று நம்பும் வரை அது தொடரத் தான் செய்யும். அதன் பின்பும் நோயின் அதிர்வலைகளும் பொருளாதார வீழ்ச்சியும் இருக்கத்தான் செய்யும்.முடிந்தாலும் இதனுடைய பாதிப்புகள் தொடரத்தான் செய்யும். புத்தி சாலித்தனமாக வாழ்க்கையை தொடர்ந்து முன்னேற்றுகிற போது நாம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையோடு வாழ்வோம்.

டாக்டர். அ.பிரபுராஜ்சென்னை. 98843 53288

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chandramoulli - Mumbai,இந்தியா
04-ஜூன்-202009:01:49 IST Report Abuse
Chandramoulli Very good analysis. V must face n achieve our goal . Good motivation .
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
04-ஜூன்-202008:27:02 IST Report Abuse
VENKATASUBRAMANIAN Good awareness. Basically he is emphasizing cleanliness lime washing hands, social distance.etc. This was only followed our ancestors but this was coveyed as untouchables. Dravidian parties took it against particular community. Still now they are doing .
Rate this:
Cancel
அன்பு - தஞ்சை,இந்தியா
04-ஜூன்-202001:13:13 IST Report Abuse
அன்பு விழிப்புடன் இருந்து, நமது பொருளாதாரத்தை வெற்றிகரமாக வீழ்த்திவிட்டோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X