பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பரிசோதனைக்கு 'ஆதார்' கட்டாயம்

Updated : ஜூன் 05, 2020 | Added : ஜூன் 04, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

சென்னை : 'சென்னையில் உள்ள, தனியார் ஆய்வகங்களில், கொரோனா பரிசோதனை செய்யும் போது, ஆதார் எண் கட்டாயம் பெற வேண்டும்' என, மாநகராட்சி கமிஷனர், பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார்.



latest tamil news




இதுகுறித்து, தனியார் ஆய்வகங்களுக்கு, சென்னை மாநகராட்சி கமிஷனர், பிரகாஷ் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:சென்னையில், 10 அரசு ஆய்வகங்கள், 13 தனியார் ஆய்வகங்கள் உள்ளன. இதில், தனியார் ஆய்வகங்களில், கொரோனா பரிசோதனை செய்யும் போது, அந்த நபர்களிடமிருந்து, முழு தகவல்களையும் பெறுவதில்லை.இதனால், பரிசோதனைக்கு பின், பாதிப்பு ஏற்படும் நபர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும், அவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு தொற்று பரவும் வாய்ப்பு ஏற்படுகிறது.எனவே, கொரோனா பரிசோதனைக்கு வருவோரிடம், பெயர், தெரு பெயர், பகுதி பெயர் என, அஞ்சல் எண்ணுடன், தற்போது உள்ள வீட்டு முகவரி வாங்க வேண்டும்.


latest tamil news




அத்துடன், 'ஆதார்' எண், அவர்களது மொபைல் எண்ணையும் வாங்க வேண்டும். மொபைல் எண்ணை வாங்கும் போது, உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்.ஆதார் எண் வழங்காத நபர்களை, முடிவுகள் வரும் வரை, தனிமைப்படுத்த வேண்டும் .இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
04-ஜூன்-202007:13:30 IST Report Abuse
Mani . V சோ, ஆதார் இல்லாதவருக்கு கொரோனா இருந்து, அவர் சமூகத்தில் அதை பரப்புவதற்கு உங்களுக்கு எதுவும் ஆட்சேபணை இல்லைத்தானுங்களே ஆபீஸர்ஸ்?
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
04-ஜூன்-202005:29:47 IST Report Abuse
blocked user இதற்கு ஒருவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையா?
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
04-ஜூன்-202005:04:12 IST Report Abuse
வெகுளி சும்மா கூப்பிட்டாலே சோதனைக்கு வராம பதுங்குவாங்க... இப்ப ஆதார் வேற அவசியம்ன்னு சொல்றீங்க... இனி மொத்தமா ஸ்லீப்பிங் மோடுக்கு போய்டுவாங்க....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X