பொது செய்தி

இந்தியா

40 லட்சத்தை கடந்த பரிசோதனைகள்; மத்திய சுகாதாரத்துறை பெருமிதம்

Updated : ஜூன் 04, 2020 | Added : ஜூன் 04, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

புதுடில்லி : 'நாட்டில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரை கண்டறிய மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் எண்ணிக்கை, 40 லட்சத்தை கடந்துள்ளது' என, மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.



latest tamil news




மத்திய சுகாதாரத்துறையின் அறிக்கை: இந்தியாவில், 41 லட்சத்து, 3,233 மாதிரிகள், இதுவரை பரிசோதிக்கப்பட்டுள்ளன. நாடு முழுதும் உள்ள, 480 அரசு மற்றும், 208 தனியார் ஆய்வகங்களில், பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. பரிசோதனை திறனை, இரண்டு லட்சமாக உயர்த்தும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.கொரோனா வைரஸ் பாதிப்பில் குணமடைந்தோரின் விகிதம், 48.31 ஆக உள்ளது. பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க, நாடு முழுதும், 952 சிறப்பு மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன.


latest tamil news




இங்கு, ஒரு லட்சத்து, 66 ஆயிரத்து, 332 தனிமை படுக்கைகளும், 21 ஆயிரத்து, 393 அவசரப் பிரிவு படுக்கைகளும், 72 ஆயிரத்து, 762 ஆக்ஸிஜன் அமைப்புடன் கூடிய படுக்கைகளும் உள்ளன. இதைத்தவிர, 2,391 சிறப்பு சுகாதார மையங்களில், ஒரு லட்சத்து, 34 ஆயிரத்து, 945 தனிமை படுக்கைகள், 11 ஆயிரத்து, 27 அவசரப் பிரிவு படுக்கைகள், 46 ஆயிரத்து, 875 ஆக்ஸிஜன் அமைப்புடன் கூடிய படுக்கைகள் உள்ளன.

மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கும், மத்திய அரசின் கீழ் இயங்கும் நிறுவனங்களுக்கும், இதுவரை, 125.28 லட்சம், 'என் 95' முகக் கவசங்கள் மற்றும், 101.54 லட்சம், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களும், மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vivek c mani - Mumbai,இந்தியா
04-ஜூன்-202017:35:54 IST Report Abuse
vivek c mani குறுகிய காலத்தில் பல்வேறு இடைஞ்சல்கள் இடையே மதிய அரசும் மாநில அரசுகளும் பெரும்பாலும் ஒன்றாக சேர்ந்து பணியாற்றுவது பாராட்ட தக்கது . மதிய அரசு போர்க்கள நடவடிக்கை போல் பல முயற்சிகளை எடுத்து முன்பின் தெரியாத ஒரு புதுவித நோய்க்கு உலகமே பல உயிர்களை இழக்கும் தருணத்தில் , பல சிகிச்சை முறைகளை பயன்படுத்தி காரோண நோயை பெரும்பாலும் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது. அதே போல் சாதாரண மக்கள் மற்றும் சிறிய பெரிய தொழிற்சாலைகளும் முன்வந்து பல சிகிச்சைக்கான உபகரணங்களை அதிவேகம் தயாரித்து மருத்துவ மனைகள் மற்றும் பணியாளர்களுக்கு கொடுக்க வழி செய்துள்ளனர். இறக்குமதியை நம்பாமல் சுயமான தயாரிப்பு நம் அரசு மற்றும் மக்களின் உழைப்புக்கும் மற்றும் முயற்சிக்கும் ஒரு சிறந்த உதாரணம். மருத்துவர்களும், காவல் துறையினரும் மற்றும் மருத்துவ பணியாளர்களும் உழைத்த உழைப்பிற்கு கைமாறு செய்வது கடினம். இந்தியர்கள் என பெருமை படுவோம். பெரியதொரு துன்பத்தை சந்திக்கும் போது சில இடர்கள் தவிர்க்க முடியாது. அதை ஏளனம் செய்யாமல் மேற்கொண்டு எப்படி சரி செய்யலாம் எனும் சிந்தனையோடு முன்னேற வேண்டும்.வாழ்க பாரதம்.வளர்க நற்சிந்தனை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X