கண்களை மூடிக் கொண்டிருக்க முடியாது: போப் எதிர்ப்பு| Pope Francis addresses George Floyd's death | Dinamalar

கண்களை மூடிக் கொண்டிருக்க முடியாது: போப் எதிர்ப்பு

Updated : ஜூன் 04, 2020 | Added : ஜூன் 04, 2020 | கருத்துகள் (38) | |
வாட்டிகன் சிட்டி: அமெரிக்காவில், கறுப்பினத்தைச் சேர்ந்தவர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு, போப் பிரான்சிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின் மினியாபொலிசில், போலீஸ்காரர் ஒருவர், கால் முட்டியால் கழுத்தில் நெருக்கியதில், ஆப்ரிக்க அமெரிக்கரான, ஜார்ஜ் பிளாய்டு(46) சமீபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, கடந்த, ஒரு வாரத்துக்கு மேலாக, அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில்
Pope, Pope Francis, George Floyd dead, George Floyd, போப், போப் பிரான்சிஸ்

வாட்டிகன் சிட்டி: அமெரிக்காவில், கறுப்பினத்தைச் சேர்ந்தவர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு, போப் பிரான்சிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் மினியாபொலிசில், போலீஸ்காரர் ஒருவர், கால் முட்டியால் கழுத்தில் நெருக்கியதில், ஆப்ரிக்க அமெரிக்கரான, ஜார்ஜ் பிளாய்டு(46) சமீபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, கடந்த, ஒரு வாரத்துக்கு மேலாக, அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இன பாகுபாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து உலக நாடுகளை சேர்ந்த பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


latest tamil news



இந்நிலையில், இச்சம்பவத்துக்கு, போப் பிரான்சிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். 'இன வேறுபாட்டை சகித்துக்கொள்ள முடியாது; கண்களை மூடிக் கொண்டிருக்க முடியாது. எந்த வகையிலும், இன பாகுபாட்டை ஏற்க முடியாது' என, அவர் கூறியுள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X