பொது செய்தி

இந்தியா

பாதுகாப்பு துறை செயலர் அஜய்குமாருக்கு கொரோனா தொற்று ?

Updated : ஜூன் 04, 2020 | Added : ஜூன் 04, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
Defence Secretary, Ajay Kumar, coronavirus, coronavirus india

புதுடில்லி: மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் அஜய் குமாருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகையில், டில்லி ரெய்சினா ஹில்ஸ் தெற்கு பிளாக் பகுதியில் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. இதன் செயலாளர் அஜய்குமாருக்கு நேற்று உடல் பரிசோதனை நடத்தியதில் கொரோனா தொற்று உறுதியானது.


latest tamil news




இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. அஜய்குமாருடன் தொடர்பில் இருந்த மேலும் 35 அதிகாரிகளுக்கும் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

சீன எல்லை விவகாரம் தொடர்பாக மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அஜய்குமாருடன் தொடர்பில் இருந்த சில அதிகாரிகளும் பங்கேற்றதால் முன்னெச்சரிக்கையாக அவர்களுக்கும் பரிசோதனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
04-ஜூன்-202010:18:35 IST Report Abuse
NicoleThomson வெகு வேகமாக மீண்டு வர இயற்கையை இறைஞ்சுகிறேன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X