ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு அனுமதி

Updated : ஜூன் 04, 2020 | Added : ஜூன் 04, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
புதுடில்லி: ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை மருத்துவ பரிசோதனைகளுக்கு பயன்படுத்தலாம் உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றி்கு சிகிச்சை அளிக்க மலேரிய தடுப்பு மருந்தான ஹைட்ராக்ஸின் குளோரோகுயின் மருந்து சீனா, இத்தாலி, ஸ்பெயின், பிரிட்டன் ,பிரன்ஸ் ,அமெரிக்கா நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வந்தது.இந்த மருந்து பாதுகாப்பானது
Anti-Malaria Drug, Hydroxychloroquine, Coronavirus,  WHO, ஹைட்ராக்ஸிகுளோரோகுயின், உலக சுகாதார அமைப்பு, அனுமதி

புதுடில்லி: ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை மருத்துவ பரிசோதனைகளுக்கு பயன்படுத்தலாம் உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றி்கு சிகிச்சை அளிக்க மலேரிய தடுப்பு மருந்தான ஹைட்ராக்ஸின் குளோரோகுயின் மருந்து சீனா, இத்தாலி, ஸ்பெயின், பிரிட்டன் ,பிரன்ஸ் ,அமெரிக்கா நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வந்தது.இந்த மருந்து பாதுகாப்பானது அல்ல பயன்படுத்துபவர்களுக்கு இதய நோய் வாய்ப்பு உள்ளது என கூறி உலக சுகாதார அமைப்பு இந்த மருந்தின் பயன்பாட்டை திடீரென நிறுத்தி வைப்பதாக அதன் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கடந்த மே.25ம் தேதி அறிவித்தார்.

இந்நிலையில் இந்த மருந்தை மருத்துவ பரிசோதனைக்கு பயன்படுத்தலாம் என அறிவித்துள்ளார்.


latest tamil newsஇது குறித்து உலக சுகாதார அமைப்பின் நோய் தொற்று பாதுகாப்பு கண்காணிப்புக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த மருந்தை பயன்படுத்தியதால் உயிரிழப்புகள் எதுவுமில்லை என்ற ஆய்வுத்தகவல் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் ஹைட்ராக்ஸி குரோரோகுயின் மருந்தை பயன்படுத்தலாம் பரிந்துரைக்கப்பட்டுளளது. இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராம.ராசு - கரூர்,இந்தியா
04-ஜூன்-202019:52:41 IST Report Abuse
ராம.ராசு மருத்துவம் என்றாலே அலோபதி முறை மட்டுமே சரியானது என்பது ஆச்சரியமாக உள்ளது. அலோபதி மத்துவம் மட்டுமே ஆராய்ச்சி செய்து தயாரிக்கப்படுவதாக கருத்து பதிய வைக்கப்படுகிறது. ஆனால் ஆராச்சி முடிவுகள் கூட மாறிக்கொண்டே வருவதும் நடைமுறையில் பார்த்துக்கொண்டுதான் உள்ளோம். அதே சமயம் சித்தா, ஆயுர்வேத போன்ற மருந்துகளும் பல வருடங்களாக அனுபவத்தில் கொடுக்கப்படுவது என்பது நம் நாட்டு பழக்கத்தில் காலம் காலமாக நடந்துகொண்டுதான் உள்ளது. நோய் வந்தபிறகு என்றால் அலோபதி மிகச் சிறப்பானது என்பதை மறுக்கவே முடியாது. அதே சமயம் வருமுன் காப்பது என்பதற்கு சித்தா, ஆயுர்வேத மருத்துவம் மிகச் சிறப்பானது என்பதையும் ஒத்துக்கொள்ளவே வேண்டும். நாம் அன்றாடம் உபயோகிக்கும் உணவுப் பொருட்களே இதற்க்கு சிறப்பான உதாரணம். சித்த மருத்துவத்தை, அதன் பெருமையை நாம் புறக்கணித்ததால், அது தனது சிறப்பை இழந்துள்ளது என்பது வருத்தமானது. இப்படி சொல்லலாம்... "மருந்தை உணவாகப் பார்ப்பது அலோபதி மருத்துவம். உணவையே மருந்தாகப் பார்ப்பது சித்த மருத்துவம்". இந்த வைரஸ் தொற்றைப் பொருத்தமட்டில் அதிகமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு அலோபதி மருத்துவத்தைப் பயன்படுத்தினாலும், நாட்டு மக்கள் அனைவருக்குமே வருமுன் காப்பது என்ற அடிப்படையில் சித்தா, ஆயுர்வேத, ஹோமியோபதி மருந்துகளை கொடுக்கலாம். "கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளைத் தடுக்க ஹோமியோபதி, யுனானி மருத்துவம் பயனுள்ளதாக இருக்கும் " என்று ஆயுஷ் அமைச்சகம் அறிவிப்பு செய்ததாகச் சொல்லப்படுகிறது. அது உண்மையாக இருக்குமென்றால், பக்கவிளைவுகள் இல்லாததாகச் சொல்லப்படுகின்ற தொற்றுநோயைத் தவிர்ப்பதற்காக, ஹோமியோபதியின் ஆர்சனிகம் ஆல்பம் 30 என்ற மருந்தை மக்களுக்கு இலவசமாகக் கொடுப்பதில் தவறு ஒன்றுமில்லை.
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
04-ஜூன்-202018:11:32 IST Report Abuse
S. Narayanan இது காரோண மார்க்கெட்டிங்
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
04-ஜூன்-202017:10:45 IST Report Abuse
Anand //டெட்ரோஸ் அதானோம்// ஒரு சீன கைக்கூலி.. இவன் அப்பதவிக்கு அருகதை அற்றவன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X