யானையை கொன்ற குற்றவாளிகள் நிச்சயம் கைது செய்யப்படுவர்: ஜவடேகர்

Updated : ஜூன் 04, 2020 | Added : ஜூன் 04, 2020 | கருத்துகள் (46)
Share
Advertisement
Central Government, Pregnant elephant, Kerala, Javadekar, Union Minister, Prakash Javadekar, யானை,குற்றவாளிகள், கைது செய்யப்படுவர்: ஜவடேகர்

புதுடில்லி: யானையை கொன்ற குற்றவாளிகள் யாரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

கேரளாவில் , பாலக்காடு மாவட்டம் மலப்புரத்தில் உள்ள, வெள்ளியார் ஆற்றில் இறந்த நிலையில் நின்றிருந்த பெண் யானையை கயிறு கட்டி கரைக்கு கொண்டு வந்து ஆய்வு செய்ததில், அந்த யானை கர்ப்பிணியாக இருந்துள்ளதும், அன்னாசி பழத்திற்குள் நாட்டு வெடிகுண்டு வைத்து கொல்லப்பட்டதும் தெரியவந்தது.


latest tamil news




நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் மத்திய அரசின் கவனத்திற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை யாரும் கைது செய்யப்பட்டவில்லை.

இது குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியது, கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட சம்பவம் மத்திய அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. பசியுடன் வந்த யானைக்கு உணவில் வெடிகுண்டை வைத்து கொடுத்தது இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது . குற்றவாளிகளை கைது செய்வதற்கான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குற்றவாளிகள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
padma r - villupuram,இந்தியா
05-ஜூன்-202010:51:09 IST Report Abuse
padma r நாட்டு வெடி குண்டு வச்ச இவனை எல்லாம் கோரோனோ வைரஸ் தாக்க கூடாது .. அது ஒரு மௌத் இல்ல ஜீவன் .. அத சாவடிக்க எப்படி தான் மனசு வந்ததொ ... குற்றவாளியை சட்டம் தண்டிக்கும் என்று மினிஸ்டர் சொல்றாரே எப்போ ... இன்னும் ஒரு ஒன்னு வீக் போச்சுன்னா இத டோடல் ஆஹ் மறந்துட்டு வேற வேலைய பாப்போம்... இவர்களை எல்லாம் அந்த கடவுள் தான் தண்டிக்கும் வேற வழி இலை...
Rate this:
Cancel
Narayanan Muthu - chennai,இந்தியா
04-ஜூன்-202020:14:01 IST Report Abuse
Narayanan Muthu சாத்தான் ஓதும் வேதம் இது. புலம்பெயர் தொழிலாளர்கள் நடை பயணமாக சென்ற பொது செத்து முடிந்தபோது தொலைக்காட்சியில் ராமாயணம் பார்த்து கொண்டிருந்தவர் அவர்களுக்காக ஒரு இரங்கல் கூட தெரிவிக்காதவர் இவர். இன்று மாட்டுக்கறி ஏற்றுமதி செய்பவர்கள் அதிகம் பேர் உத்தரப்பிரதேசத்தில்தான் அங்கு சென்று பொங்கலாமே இவர்.
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
04-ஜூன்-202018:07:26 IST Report Abuse
S. Narayanan யானையை கொன்றவனை கொரநா நோயாளிகள் மத்தியில் ஒரு மாதம் தங்க வைக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X