யானையை கொன்ற குற்றவாளிகள் நிச்சயம் கைது செய்யப்படுவர்: ஜவடேகர்| Pregnant elephant's killing in Kerala: Stern action will be taken, says Javadekar | Dinamalar

யானையை கொன்ற குற்றவாளிகள் நிச்சயம் கைது செய்யப்படுவர்: ஜவடேகர்

Updated : ஜூன் 04, 2020 | Added : ஜூன் 04, 2020 | கருத்துகள் (46)
Share
புதுடில்லி: யானையை கொன்ற குற்றவாளிகள் யாரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.கேரளாவில் , பாலக்காடு மாவட்டம் மலப்புரத்தில் உள்ள, வெள்ளியார் ஆற்றில் இறந்த நிலையில் நின்றிருந்த பெண் யானையை கயிறு கட்டி கரைக்கு கொண்டு வந்து ஆய்வு செய்ததில், அந்த யானை கர்ப்பிணியாக இருந்துள்ளதும், அன்னாசி பழத்திற்குள் நாட்டு
Central Government, Pregnant elephant, Kerala, Javadekar, Union Minister, Prakash Javadekar, யானை,குற்றவாளிகள், கைது செய்யப்படுவர்: ஜவடேகர்

புதுடில்லி: யானையை கொன்ற குற்றவாளிகள் யாரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

கேரளாவில் , பாலக்காடு மாவட்டம் மலப்புரத்தில் உள்ள, வெள்ளியார் ஆற்றில் இறந்த நிலையில் நின்றிருந்த பெண் யானையை கயிறு கட்டி கரைக்கு கொண்டு வந்து ஆய்வு செய்ததில், அந்த யானை கர்ப்பிணியாக இருந்துள்ளதும், அன்னாசி பழத்திற்குள் நாட்டு வெடிகுண்டு வைத்து கொல்லப்பட்டதும் தெரியவந்தது.


latest tamil news
நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் மத்திய அரசின் கவனத்திற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை யாரும் கைது செய்யப்பட்டவில்லை.

இது குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியது, கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட சம்பவம் மத்திய அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. பசியுடன் வந்த யானைக்கு உணவில் வெடிகுண்டை வைத்து கொடுத்தது இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது . குற்றவாளிகளை கைது செய்வதற்கான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குற்றவாளிகள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது என்றார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X