காந்தி சிலை அவமதிப்பு: மன்னிப்பு கோரினார் அமெரிக்க தூதர்| US Ambassador to India apologises for desecration of Gandhi's statue in Washington | Dinamalar

பொது செய்தி

இந்தியா

காந்தி சிலை அவமதிப்பு: மன்னிப்பு கோரினார் அமெரிக்க தூதர்

Updated : ஜூன் 04, 2020 | Added : ஜூன் 04, 2020 | கருத்துகள் (13)
Share
Gandhi statue, Washington, US Ambassador to India, apologises, காந்தி சிலை, மன்னிப்பு ,அமெரிக்க தூதர், கென் ஜெஸ்டர், sincere apologies, Ken Juster, U.S. Ambassador , India

புதுடில்லி: அமெரிக்காவில் மகாத்மா காந்தி சிலையை விஷமிகள் சேதப்படுத்தியதற்காக இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் கென் ஜெஸ்டர் மன்னிப்பு கோரியுள்ளார்.


அமெரிக்காவில் மினியாபொலிசில், போலீஸ்காரர் ஒருவரால் ஆப்ரிக்க அமெரிக்கரான, ஜார்ஜ் பிளாய்டு, 46, கொல்லப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்து கடந்த, ஒரு வாரத்துக்கு மேலாக, அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், தலைநகர் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரக வளாகத்தில் மகாத்மா காந்தி சிலையை விஷமிகள் சிலர் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.


latest tamil newsஇந்த சம்பவத்திற்கு இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் கென் ஜெஸ்டர் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.


இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, இந்திய தூதரகத்தில் காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதற்காக அமெரிக்கா சார்பில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இதனை இந்திய அரசு கருணையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X