பொது செய்தி

தமிழ்நாடு

காட்மேன் வெப் சீரிஸ் இயக்குநர், தயாரிப்பாளருக்கு மீண்டும் சம்மன்

Updated : ஜூன் 04, 2020 | Added : ஜூன் 04, 2020 | கருத்துகள் (35)
Share
Advertisement
சென்னை: சம்மன் அனுப்பியும் ஆஜராகாத 'காட்மென்' வெப்சீரிஸ் தொடரின் தயாரிப்பாளர் இளங்கோவன், இயக்குநர் பாபு யோகேஸ்வரனுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் 2வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளனர். அப்போதும் ஆஜராக தவறினால், சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளனர்.ஜெயபிரகாஷ், டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால் நடித்துள்ள வெப்சீரிஸ் 'காட்மேன்'. இதை பாபு
காட்மேன், இயக்குநர், தயாரிப்பாளர், godman, Makers of Godman, web series, summons, Director, Producer

சென்னை: சம்மன் அனுப்பியும் ஆஜராகாத 'காட்மென்' வெப்சீரிஸ் தொடரின் தயாரிப்பாளர் இளங்கோவன், இயக்குநர் பாபு யோகேஸ்வரனுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் 2வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளனர். அப்போதும் ஆஜராக தவறினால், சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளனர்.

ஜெயபிரகாஷ், டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால் நடித்துள்ள வெப்சீரிஸ் 'காட்மேன்'. இதை பாபு யோகேஸ்வரன் என்பவர் இயக்கி இருந்தார். இளங்கோவன் தயாரித்துள்ளார். ஜீ5 ஓடிடியில் ஜுன் 12ல் வெளியிட இருந்தனர். அதற்கு முன்பாக இதன் டீசர் கடந்த வாரம் வெளியானது.
அதில் இந்து மத நம்பிக்கையை அவமதிக்கும் வகையிலும், பிராமண சமூகத்தை இழிவுப்படுத்தியும் வசனங்களும், ஆபாச காட்சிகளும் நிறைந்து இருந்தன. இதற்கு கடும் கண்டனங்கள் குவிந்தன. இந்த தொடரை தடை செய்ய வேண்டும்.
சம்பந்தப்பட்ட இதன் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் ஜீ5 மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்தது. பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளதை தொடர்ந்து இந்த தொடரை நிறுத்தி வைப்பதாக ஜீ5 நிறுவனம் அறிவித்தது.


latest tamil newsஇதற்கிடையே சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் இந்து முன்னணி, பா.ஜ., உள்ளிட்டடோர் புகார் அளித்தனர் இதன் பேரில் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலீசார், காட்மேன் தொடரின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மீது வழக்கு பதிவு செய்தனர். அவர்கள் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பினர். ஆனால், இதன்படி, அவர்கள் நேற்று போலீசார் முன்னிலையில் அவர்கள் ஆஜராகவில்லை.
இதனையடுத்து, இளங்கோவன், பாபு யோகேஸ்வரனுக்கு 2வது முறையாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். அதில், 6ம் தேதி காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும். தவறினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
04-ஜூன்-202020:24:47 IST Report Abuse
Krishnamurthy Venkatesan நான் பிரதம மந்திரியின் வெப் போர்டலில் CPGRAMS மூலமாக MINISTRY OF iNFORMATION AND BROADING ற்கு COMPLAINT செய்தேன். அதற்கு அவர்கள் THIS CPGRAMS DOES NOT COME UNDER THIS MINISTRY என்று பதில் போட்டு FULLY RESOLVED என்று சொல்லிவிட்டார்கள். இவர்களுக்கு அது வராது என்றால் இந்த COMPLAINT எந்த மினிஸ்ட்ரிக்கு வருமோ அவர்களுக்கு அனுப்புவதுதான் முறை.
Rate this:
04-ஜூன்-202021:09:40 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம்இதற்கெல்லாம் செய்த நீ ஏன் ஏழைகளுக்கு 5000 கொடுக்க சொல்லி எழுதி இருக்கக்கூடாது...
Rate this:
Cancel
Prasath - madurai,இந்தியா
04-ஜூன்-202018:50:03 IST Report Abuse
Prasath ஏன் இதுல இவ்ளோ ஆர்வமா இருக்குனு தெரியல??
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
04-ஜூன்-202017:57:42 IST Report Abuse
S. Narayanan இந்துக்களுக்கு எதிராக படமெடுத்தால் இந்துக்கள் கண்டுகொள்ள மாட்டார்கள் என்று நினைத்தவர்களுக்கு சிம்ம சொப்பனமாக நடவடிக்கை எடுத்து இனி எவரும் இத்தகைய இழி செயல்களில் ஈடு படாத நிலை வர வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X