பொது செய்தி

இந்தியா

இந்தியா - ஆஸி., உறவால் உலகிற்கு நன்மை: பிரதமர் மோடி

Updated : ஜூன் 04, 2020 | Added : ஜூன் 04, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
இந்தியா, ஆஸ்திரேலியா, ஆஸி., பசுபிக், இந்தோ-பசுபிக், பிரதமர்  மோடி, ஆஸி., பிரதமர் ஸ்காட் மோரிசன், india, australia, Pm, modi, scott morrison, corona, AUSTRALIAN PM,

புதுடில்லி: இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான உறவினால், உலக நாடுகளுக்கே நன்மை பயக்கும் என, இரு நாடுகளுக்கு இடையிலான மெய்நிகர் மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்தார். இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் இந்தியா முக்கிய பங்காற்ற வேண்டும் என ஆஸி., பிரதமர் தெரிவித்தார்.


latest tamil news
இந்திய- ஆஸ்திரேலிய உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்த மாநாடு டில்லியில் நடத்த திட்டமிட்டப்பட்டிருந்தது. இதில் கலந்து கொள்ள ஸ்காட் மோரிசன் இந்தியா வர விருந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டது. இரு நாட்டு பிரதமர்களும் வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று ஆலோசனை நடத்தினர். இதில் இரு தரப்பு பரஸ்பரம் நட்புறவு , பாதுகாப்பு, வர்த்தகம், கடல்சார் ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும், உலகில் பரவியுள்ள கொடிய வைரசான கொரேனா தொற்று குறித்தும், இரு நாடுகளுக்கிடையே உறவு மேலும் செழிப்பாக வளர மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.


latest tamil newsபிரதமர் மோடி பேசியதாவது: ஆஸி.,யில் கொரோனாவால் பாதித்தவர்களுக்கு, இந்திய மக்கள் சார்பில் வருத்தங்களை தெரிவித்து கொள்கிறேன்.இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான உறவை வலுப்படுத்த இதுவே சரியான நேரம். நமதுநட்பை பலப்படுத்த ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. மேலும், தற்போது ஏற்பட்டுள்ள சவால்களை, வாய்ப்பாக மாற்ற ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. நமது உறவை பொறுத்து தான், இந்த பிராந்தியத்தில் நிலைத்தன்மை நிலவும். கொரோனா பிரச்னையை ஒரு வாய்ப்பாக மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அனைத்து துறைகளிலும் சீர்திருத்தங்களை கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இதன் பலன்கள் விரைவில் தெரிய வரும். கொரோனாவால் ஏற்பட்டுள்ள பிரச்னைகளில் இருந்து விடுபட ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ஆஸி.,யுடன் உறவை வலுப்படுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளது. இதனால், இரு நாடுகளுக்கு மட்டும் அல்லாமல், இந்தோ - பசுபிக் - பிராந்தியத்திற்கும், உலகத்திற்கும் இதனால், பலன் கிடைக்கும் . இவ்வாறு பிரதமர் பேசினார்.
latest tamil newsஇதன் பின்னர் ஆஸி., பிரதமர் ஸ்காட் மோரிசன் பேசுகையில், இந்தியாவிற்கு மட்டுமல்லமல், ஜி20 இந்தோ பசுபிக் பிராந்தியத்திற்கு தலைமை வகிப்பதற்கும், இந்த மோசமான சூழ்நிலையில், ஸ்திரத்தன்மை நிலவவும், ஆக்கப்பூர்வமான, நேர்மறையான நடவடிக்கைகளை எடுத்த பிரதமர் மோடிக்க நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்தோ - பசுபிக் பகுதியில் இந்தியாவின் பங்களிப்பிற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.

இந்த பகுதி வருங்காலங்களில் முக்கிய பங்காற்றும. இது போன்ற சூழ்நிலையில் நாம் வீடியோ கான்பரன்ஸ் முறையில் சந்திப்பது எனக்க ஆச்சர்யம் அளிக்கவில்லை. பல ஆண்டுகளுக்கு முன்னரே, உங்களது பிரசாரத்தில் ஹோலோகிராம் முறையை பயன்படுத்தியுள்ளீர்கள். அடுத்த முறை, இங்கும் அதனை நாம் பயன்படுத்தலாம் இவ்வாறு ஆஸி., பிரதமர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
04-ஜூன்-202018:00:16 IST Report Abuse
S. Narayanan நன்றி மோடிஜி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X