இரும்பு தடுப்பில் எதிரொளிப்பான் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

Added : ஜூன் 04, 2020
Share
Advertisement

கரூர்: கரூர்-வெங்கமேடு இடையே ரயில்வே மேம்பாலத்தில், புதிய இரும்பு தடுப்புகளில், எதிரொளிப்பான் (சிவப்பு நிற ரிப்ளெக்டர் விளக்குகள்) இல்லாததால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
கரூர்-சேலம் பழைய சாலை வெங்கமேட்டில், ரயில்வே தண்டவாளங்களுக்கு இடையே உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. கரூர்-ஈரோடு மற்றும் சேலம் இடையே டீசல் இன்ஜின் மூலம் ரயில்கள் இயக்கப்பட்ட போது, பாலத்தின் நடைமேடைக்குள் நின்று, வேடிக்கை பார்ப்பவர்கள் தவறி விழுவதை தடுக்க இரும்பு தடுப்புகள் இருந் தன. தற்போது, இரண்டு ரயில்வே வழித்தடங்கலும் மின்மயமாக்கப்பட்டுள்ளது. இதனால், நடைமேடையை தாண்டி பாலத்தின், இருபக்கமும் சாலையில் வெள்ளை நிற பெயின்ட் அடிக்கப்பட்ட இரும்பு தடுப்புகள் கூடுதலாக வைக்கப்பட்டுள்ளன. அதில், இரவு நேரத்தில் ஒளிரும் வகையில் எதிரொளிப்பான் இல்லை. இந்நிலையில், ரயில்வே பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள பெரும்பாலான மின் கம்பங்களிலும் விளக்குகள் எரிவது இல்லை. இதனால், வாகனங்களில் செல்வோர், புதிய இரும்பு தடுப்பு வைக்கப்பட்டுள்ளதை பார்க்க முடியாமல், அதன் மீது மோதி விபத்துக்குள்ளாகின்றனர். எனவே, கரூர்-வெங்கமேடு இடையே உள்ள உயர்மட்ட பாலத்தில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்புகளில், எதிரொளிப்பான் அமைக்க, ரயில்வே துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X