ஆபத்தை உணராத பொதுமக்கள்; ரயில் பாதையை கடப்பதால் விபத்து

Added : ஜூன் 04, 2020
Share
Advertisement

கரூர்: வெங்கமேடு ரயில்வே மேம்பாலத்திற்கு கீழ், ரயில் பாதையை ஆபத்தை உணராமல் மக்கள் கடந்து செல்கின்றனர்.
கரூர் வழியாக தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் முன், சேலம், நாமக்கல் பகுதியில் இருந்து வாகனங்கள், வெங்கமேடு வழியாக கரூர் நகருக்கு செல்லும். அப்போது, வெங்கமேடு பகுதியில் ரயில்வே கேட் போடப்படும் நேரத்தில், போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனால், 'வெங்கமேட்டில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும்' என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, 2006ல், வெங்கமேடு -கரூர் இடையே ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது. ஆனால், ரயில்வே பாதையை பொதுமக்கள் கடந்து செல்வதை தடுக்கும் வகையில், கீழ்பகுதியில் இருந்து மேம்பாலத்துக்கு செல்ல படிக்கட்டுகள் அமைக்கவில்லை. இதனால், வெங்கமேடு மற்றும் கரூர் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவியர், ஆபத்தான நிலையில் ரயில்வே இருப்பு பாதையை கடந்து செல்கின்றனர். இந்த பகுதியை சுற்றிலும் ஏராளமான ஜவுளி நிறுவனங்கள் உள்ளன. இங்கு, பல்வேறு பகுதிகளில் இருந்து வேலைக்கு வந்து செல்கின்றனர். இவர்களும் ரயில் தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர். அப்போது, ரயிலில் சிலர் எதிர்பாராதவிதமாக அடிப்பட்டு இறக்கின்றனர்.வெங்கமேட்டில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு, 14 ஆண்டுகள் ஆன நிலையிலும், பொதுமக்கள் நடந்து செல்ல வசதியாக மேம்பாலத்தின் கீழ் பகுதியில் இருந்து படிக்கட்டுகள் அமைக்கவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X