கறுப்பின அமெரிக்கர் ஜார்ஜ் பிளாய்டு கொலை: 4 போலீசார் கைது

Updated : ஜூன் 04, 2020 | Added : ஜூன் 04, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
Minneapolis police, George Floyd, Floyd death, officers held, ஆப்பிரிக்கர்,ஜார்ஜ் பிளாய்டு கொலை வழக்கில் நான்கு போலீசார் கைது

மினியாபொலிஸ்: அமெரிக்காவின் மினியாபொலிசில், போலீஸ்காரர் ஒருவர், கால் முட்டியால் கழுத்தில் நெருக்கியதில், ஆப்ரிக்க அமெரிக்கரான, ஜார்ஜ் பிளாய்டு, 46, உயிரிழந்த சம்பவத்தில் 4 போலீசார் பணி நீக்கம் செய்யப்பட்டு வழக்கப்பதிவு செய்யப்பட்டது. அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஜார்ஜ் பிளாய்டு கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து கடந்த, ஒரு வாரத்துக்கு மேலாக, அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.


latest tamil news




இந்நிலையில் ஜார்ஜ் பிளாய்டு பலியான சம்பவத்தில் மினியாபொலிஸ் நகரத்தைச் சேர்ந்த 4 போலீசார் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இவர்களில் டெர்ரிக் சவுரின் என்ற போலீஸ் அதிகாரி தான் ஜார்ஜ் பிளயாட் கழுத்தை இடது முட்டியால் நெருக்கினார். அதனை சக போலீசார் மூன்று பேர் வேடிக்கை பார்த்தனர்.
இதையடுத்து நான்கு போலீசார் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
நீதிமன்றத்தில் தகுந்த ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து நான்கு போலீசாருக்கும் அதிகபட்சமாக 40 ஆண்டுகள் கடுங்கால் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக பல்வேறு ஊடகங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NARAYANAN.V - coimbatore,இந்தியா
07-ஜூன்-202017:03:09 IST Report Abuse
NARAYANAN.V இந்தத் து.கட்டை மிருகத்தால் அமெரிக்கா ஒரு பக்கம் வெந்து கொண்டு இருக்கிறது.அமெரிக்காக்காரனுகளுக்கு, தலைக்கு மேல,ஆணவம் தாண்டவமாடுறது வெட்ட வெளிச்சமாத் தெரியுது.
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
04-ஜூன்-202017:30:19 IST Report Abuse
S. Narayanan சரியான நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு எமது பாராட்டுக்கள்.
Rate this:
Cancel
04-ஜூன்-202017:28:39 IST Report Abuse
theruvasagan துப்பாக்கி சூட்டில் பலியானது ஏழு தமிழன்கள் என்றால் தா. கிருட்டிணன் போன்றவர்கள் தமிழர்கள் இல்லையா அல்லது தினகரன் பத்திரிகை அலுவலகத்தில் கொடூரமாக எரிக்கப்பட்டவர்கள் தமிழர்கள் இல்லையா. அந்த குற்றங்களை கண்டித்து இந்த தமிழ்க் காவலர்கள் என்றைக்காவது போராடினார்களா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X