கிருமிக்கு எதிரி கிருமி| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

கிருமிக்கு எதிரி கிருமி

Added : ஜூன் 04, 2020
Share
கிருமிக்கு எதிரி கிருமி

கெட்ட கிருமிகளை கபளீகரம் செய்யும் நல்ல கிருமிகள் பல்லாயிரம் உள்ளன. அவற்றைக் கொண்டு கொரோனா பரவலை தடுக்க முடியும் என்கிறது பெல்ஜியத்தை சேர்ந்த பிரீசோ (Breezo). இது உருவாக்கியுள்ள செவியுணரா ஒலிஅலைகளைக் கொண்டு இயங்கும் ரூம் ஸ்பிரே இயந்திரம், 'புரோபயாடிக்' எனப்படும் நல்ல கிருமிகளை அலுவலக அறைகளில் தொடர்ந்து துாவிக்கொண்டே இருக்கும்.

இரண்டு மீட்டர் இடைவெளியைக் கோரும் கொரோனா, காற்றிலும் பரவும் தன்மை உடையது என்பதால், பிரீசோவின் தொடர் துாவல்களால், நல்ல கிருமிகள் காற்றிலேயே கெட்ட கிருமிகளை விழுங்கி ஏப்பம் விடும். தவிர, புரோபயாடிக் கிருமிகள் மெல்ல, மெல்ல மேசை, நாற்காலிகள், கோப்புகள் போன்றவற்றின் மீது படிந்து, குடியேறி சில நாட்கள் வரை உயிருடன் இருந்து இனப்பெருக்கம் செய்யும் என்பதால், அந்த பரப்புகளில் கெட்ட கிருமிகள் இருந்தால் அவற்றையும் உள் வாங்கி ஜீரணித்து விடும் என்கிறது பிரீசோ.

ஏற்கனவே, அலுவலகங்களில், கிருமி நாசினிகள், வாசனை திரவியங்களை தெளிப்பது வழக்கத்தில் இருப்பதால், புரோபயாடிக் ஆயுதத்தை பல அலுவலகங்கள் கையிலெடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X