குஜராத்தில் இரு காங்., எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா

Updated : ஜூன் 04, 2020 | Added : ஜூன் 04, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
Congress MLAs, Gujarat, resign, Rajya Sabha polls, குஜராத்,இரு காங். எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா,ahead of Rajya Sabha polls

காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் நடக்க உள்ள ராஜ்யசபா தேர்தலையொட்டி அம்மாநில காங். எம்.எல்.ஏ.க்கள் இருவர் இன்று ராஜினாமா செய்தனர்.

குஜராத் மாநிலத்தில் காலியாக உள்ள நான்கு ராஜ்யசபா பதவிக்கு வரும் 19-ம் தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஓட்டு முக்கியம்.
இந்நிலையில் முதல்வர் விஜய் ரூபானியை காங். கட்சியைச் சேர்ந்த கீர்த்தி படேல், லலித் வசோயா என்ற இரு எம்.எல்.ஏ..,க்கள் சந்தித்து பேசினர்.


latest tamil news
இதையடுத்து தங்களது பதவியை ராஜினாமா செய்து சபாநாயகர் ராஜேந்திரா திரிவேதியிடம் கொடுத்தனர். அவர்களது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மொத்தமுள்ள 182 சட்டசபை உறுப்பினர்களில், பா.ஜ.விற்கு 103 உறுப்பினர்களும், காங். கட்சிக்கு 68 உறுப்பினர்களும் உள்ளனர். ராஜ்யசபா தேர்தலில் எம்.எல்.ஏ.க்களின் ஓட்டு முக்கியம் என்பதால் காங். பலத்தை குறைக்க எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா படலம் அரசியல் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva - Aruvankadu,இந்தியா
04-ஜூன்-202022:13:43 IST Report Abuse
Siva காங்கிரஸ் கலைவது தேசப்பிதா காந்தியின் ஆசை அல்லது கனவு... நடக்கட்டும்...
Rate this:
Cancel
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
04-ஜூன்-202018:35:44 IST Report Abuse
வாய்மையே வெல்லும் ராவுளுக்கு வெளிநாட்டில் உள்ளவர்களிடம் விடீயோக்களில் பேசி அரசை குறை கூற தான் நேரம் உள்ளது.. தன்னுடைய உட்கட்சி பூசலில் தலையிட்டு ஆக்க பூர்வமான தீர்வை எடுக்க முடியாதவர்.. இப்படி இருக்க பாஜாகாவின் மேல் இங்கிருப்பவர்களுக்கு எதற்க்காக கோவம் பொத்துக்கொண்டு வருகிறது..? மொதல்ல உங்க கட்சியை கட்டுக்கோப்பா வைக்க நினையுங்க..அதை விட்டுவிட்டு வெட்டி பேச்சு பேசினா இந்த மாதிரி ஏடாகூடம் தான் நடக்கும் .. அகில பாரத கட்சி சின்னாபின்னமாக உடைவது உறுதி..அதை ராவுலே முன்னின்று முடித்து வைப்பார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X