பொது செய்தி

இந்தியா

விவசாய துறையில் மாற்றம் ஏற்படுத்தும் ' ஒரே இந்தியா, ஒரே விவசாய சந்தை'

Updated : ஜூன் 04, 2020 | Added : ஜூன் 04, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
விவசாய துறை, மத்தியஅரசு, அவசர சட்டம், ஒரே நாடு ஒரே விவசாய சந்தை, பிரதமர் மோடி, மத்திய அமைச்சரவை, தோமர், விவசாயிகள், விவசாயம், மாநில அரசுகள், நுகர்வோர், central government, govt of india, agriculture, india, farmers, delhi, india, cabinet, union cabinet, Farming Produce Trade and Commerce, Minister of Agriculture and Farmers Welfare, Narendra Singh Tomar, One India, One Agriculture Market

புதுடில்லி: விவசாய பொருட்களை கட்டுப்பாடுகளின்றி விற்பனை செய்து விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க திட்டங்களை வகுத்துள்ள மத்திய அரசு, '' ஒரே இந்தியா, ஒரே விவசாய சந்தை'' என்பதை உருவாக்க 3 அவசர சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இந்த துறையில் முதலீடுகளை ஈர்க்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த அவசர சட்டங்களை கடந்த காலங்களிலும் கொண்டு வர பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவை வெற்றி பெறவில்லை. தடையில்லா மாநிலங்களுக்கு வெளியேயும் உள்ளேவும் விவசாய பொருட்களை விற்கவும், முன்கூட்டிய நிர்ணயம் செய்து, அதற்கு ஒப்பந்தங்கள் மூலம் மொத்த விற்பனையாளர்கள், பெரிய சில்லரை விற்பனையாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுடன் இணைந்து விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்க வைக்கவும்,, உருளை , எண்ணெய் வித்துகள், சமையல் எண்ணெமய், வெங்காயம் மற்றும் உருளை ஆகியவற்றை அத்தியாவசிய பொருட்களில் இருந்து நீக்க அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவும் நடந்த முயற்சிகள் கைகூடவில்லை. அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தம் செய்வதன் மூலம், விவசாய பொருட்களை வைத்திருக்கவும், கொண்டு செல்லவும், விநியோகம் மற்றும் விற்பனை செய்வதற்கு சுதந்திரம் கொடுப்பதுடன், விவசாய துறையில் தனியார் மற்றும் அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்க்கும்.

அத்தியாவசிய பொருட்கள் சட்ட திருத்தம் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த மாதம் நிருபர்களை சந்தித்த போது தெரிவித்தார். ஆனால், தற்போது பார்லிமென்ட் கூடாததால், கொரோனா அச்சுறுத்தல் உள்ள சூழ்நிலையில், விவசாயிகளுக்கு உடனடி நிவாரணம் கொண்டு வர அவசர சட்டத்தை கொண்டு வந்துள்ளது.

தற்போது, மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள விவசாய பொருள் சந்தை கமிட்டி (ஏபிஎம்சி)க்கு வெளியே, விவசாயிகள், தங்களது உற்பத்தி பொருளை விற்பதற்கு பல தடைகளை எதிர்கொள்கின்றனர். ஏபிஎம்சி குறித்த சட்டங்களின்படி, விவசாயிகள் தங்களின் உற்பத்தி பொருட்களை, மாநில அரசின் பதிவு பெற்றவர்கள், மாநில அரசின் பிரதிநிதிகளிடம் தான் விற்க வேண்டும். தற்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்தின் மூலம், விவசாயிகள், வர்த்தகர்கள், தங்களது விருப்பத்திற்கு ஏற்ப விவசாய பொருட்களை விற்கவும், வாங்கவும் சூழ்நிலை உருவாகியுள்ளது. விவசாயிகளுக்கு வருமானம் அதிகரிக்கும்.


latest tamil newsஊரடங்கு காலத்தில், விவசாயிகள், தங்களது காய்கறிகள், பழங்கள் மற்றும் விவசாய பொருட்களை விற்று கொள்ள அனுமதி வழங்கியது. தற்போது, விவசாயிகள் தங்களது பொருட்களை தனி நபர், கூட்டளவு அல்லது விவசாய உற்பத்தி அமைப்புகளிடம் நேரடியாக விற்கும் வகையில் மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. மத்திய அரசு, பார்லிமென்ட் கூடும் போது, அவசர சட்டத்திற்கு மாற்றாக புதிய சட்டம் கொண்டு வரும். சந்தை அபாயத்தை முதலீடு செய்பவர்களிடம் மாற்றும் வகையிலும், விவசாயிகள் நவீன தொழில்நுட்பத்தை பெறும் வகையிலும் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. முன்கூட்டிய விலை நிர்ணயம் மூலம் வர்த்தகர்கள் மற்றும் தனி நபர்களிடம் விவசாயிகள் ஒப்பந்தம் போடும் போது, இந்த அவசர சட்டத்தின்படி, சந்தையில் சரிவு ஏற்பட்டாலும், விவசாயிகளுக்கு அவர்கள் முன்னரே நிர்ணயித்த விலை கிடைக்கும்.

இது குறித்த சட்டங்களை, பிரதமர் மோடியின், முதலாவது ஆட்சி காலத்தில் கொண்டு வர திட்டமிடப்பட்டது. இதற்காக, ஏபிஎம்சி சட்டங்களை திருத்தும்படி மாநில அரசுகள் கேட்டு கொள்ளப்பட்டன. ஆனால், அதற்கு மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், கடந்த மாதம் 21ம் தேதி வீடியோ கான்பரன்ஸ் முறையில் அனைத்து மாநில அரசுகளுடன் விவசாயத்துறை செயலர் சஞ்சய் அகர்வால் ஆலோசனை நடத்தினார். அப்போது, எந்த மாநில அரசும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.இது குறித்து சஞ்சய் அகர்வால் கூறுகையில், மாநில அரசுகள், ஏபிஎம்சி சட்டத்தை தொடரவும், மண்டிகளை முறைப்படுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டதாகவும், மத்திய அரசின் சட்டம், விவசாயிகளுக்கு பாதுகாப்பு அம்சங்களுடன் கூடுதல் வசிகளை அளிக்கும் என்றார்.

.விவசாயம் மாநிலங்களின் பட்டியலில் உள்ளதால், மத்திய அரசு எப்படி அவசர சட்டம் கொண்டு வர முடியும் என்ற கேள்விக்கு விவசாயத்துறை அமைச்சர் தோமர் கூறுகையில், மாநிலங்களுக்கு இடையிலான விவசாய பொருட்கள் உற்பத்தியை மத்திய அரசு கையாண்டதால், மத்திய அரசு பட்டியலிலும் வரும். அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டாலும், நுகர்வோர் நலனில் எந்த சமரசமும் செய்ய முடியாது. விவசாயிகள் மற்றும் நுகர்வோரின் நலனை கருத்தில் கொண்ட அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
04-ஜூன்-202022:53:17 IST Report Abuse
தல புராணம் அடித்தளம் போடாமல், சுவர் காட்டாமல், வாசல், ஜன்னல் வைக்காமல், முதலில் கூரை போடுவது தான் நம்ம அரசோடு திட்டங்களாக இருக்கு. கமாடிட்டி டிரெடிங்கால் விவசாயிக்கு பலன் கிடைக்குமா ? யோசிங்க மக்களே? விவசாயி இதுக்கு தயாராக இருக்கானா ? விவசாயிகளை இதற்கு தயார்படுத்த அரசு என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது. எதையுமே எடுத்தோம், கவுத்தோம் என்ற பாணி தானா ?
Rate this:
Cancel
04-ஜூன்-202021:59:58 IST Report Abuse
குரும்பன் ஆமாம்..காலையில் இட்லி சாப்பிடகூடாது சப்பாத்தி சாப்பிட வேண்டும்..மாலை பருப்பு வடை சாப்பிடாமல் பானி பூரி சாப்பிட வேண்டும்..சட்டம்...ம்ம்ம்ம்..சட்டம்..மமோடி சூப்பர்..பிஜேபி சூப்பர்...ம்ம்ம்
Rate this:
Cancel
siriyaar - avinashi,இந்தியா
04-ஜூன்-202021:42:10 IST Report Abuse
siriyaar But it must be allowed only for Indian companies, but looks like another field ed for American commsion business like OLA UBER Amazon.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X