பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 1,384 பேருக்கு கொரோனா: பாதிப்பு 27,256 ஆக அதிகரிப்பு

Updated : ஜூன் 04, 2020 | Added : ஜூன் 04, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் இன்று 1,384 பேருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து, பாதிப்பு 27,256 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து 5வது நாளாக தொற்று எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது.இது குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது : தமிழகத்தில், இன்று 1,384 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில் ஒருவர் குவைத்தில் இருந்தும், 5 பேர்
தமிழகம், கொரோனா, கொரோனாவைரஸ், தொற்று, உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று 1,384 பேருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து, பாதிப்பு 27,256 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து 5வது நாளாக தொற்று எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இது குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது : தமிழகத்தில், இன்று 1,384 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில் ஒருவர் குவைத்தில் இருந்தும், 5 பேர் மஹாராஷ்டிராவில் இருந்தும், 4 பேர் தெலுங்கானாவில் இருந்தும், கேரளாவில் இருந்து ஒருவரும் வந்தவர்கள். மற்ற 1,373 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,256 ஆக அதிகரித்துள்ளது.


latest tamil news


இன்று மட்டும் 16, 447 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. தற்போது வரை , 5,44,981 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அதேபோல், இன்று வரை 15,991 பேருக்கும், மொத்தம் 5,20,286 பேருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று கொரோனா உறுதியானவர்களில் 783 பேர் ஆண்கள், 601 பேர் பெண்கள். தற்போது வரை 16,964 ஆண்களும், 10,278 பெண்களும், த மூன்றாம் பாலினத்தவர்கள் 14 பேரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் 585 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால், குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 14901 ஆகவும், இன்று மேலும் 12 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து மொத்த உயிரிழப்பு 220 ஆகவும் அதிகரித்துள்ளது.

0-12 வயதுடையவர்களில் 1 506 பேரும், 13- 60 வயதுடையவர்களில் 23,084 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 2,712 பேரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishna - bangalore,இந்தியா
05-ஜூன்-202010:48:07 IST Report Abuse
Krishna ONLY SIMULANEOUS ALL WORLD-STRICT LOCKDOWN with Social Distancing-Masks (for 15days With Most essentials Door delivered by Govt Staff followed by Localised Lockdown in all Hi-Concentration Areas for 15days-Extendable if Really required Testing Done only for Outgoers & Really Affected) HALTS DANGEROUS SPREAD (Otherwise Remains & Re-Flares Everywhere).
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X