'ஜார்ஜ் பிளாய்டுக்கு கொரோனா தொற்று ': பிரேத பரிசோதனையில் தகவல்

Updated : ஜூன் 04, 2020 | Added : ஜூன் 04, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
ஜார்ஜ் பிளாய்ட், கொரோனா தொற்று, பிரேத பரிசோதனை, தகவல், George Floyd, autopsy, covid-19, corona, coronavirus, corona outbreak, corona update, corona news, US, America, black man, US police, police, George Floyd death, Minneapolis

வாஷிங்டன்: அமெரிக்க போலீசால் கொல்லப்பட்ட ஆப்ரிக்க அமெரிக்கர் ஜார்ஜ் பிளாய்டு, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில், மின்னசோட்டா மாகாணத்தின் மினியாபொலிசில், ஜார்ஜ் பிளாய்டு என்ற ஆப்ரிக்க அமெரிக்கரை, டெரிக் சாவின் என்ற போலீஸ்காரர் , சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தினார். அப்போது, பிளாய்டை தரையில் தள்ளி, அவரின் கழுத்தில், தன் கால் முட்டியால் அழுத்தியுள்ளார். இதில் மூச்சுத் திணறி, பிளாய்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பிளாய்டு மரணத்திற்கு நீதி கேட்டும், கறுப்பின மக்களுக்கு எதிரான கொடுமைகளை கண்டித்தும் அமெரிக்கா முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

ஹென்னெபின் கவுண்டி மருத்துவ பரிசோதனை அலுவலகம், ஜார்ஜ் பிளாய்டின் 20 பக்க பிரேத பரிசோதனை அறிக்கையை, குடும்ப உறுப்பினர்களின் அனுமதியுடன் வெளியிட்டுள்ளது. அதில் பிளாய்டு கழுத்தில் காலை வைத்து அழுத்திய போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவருடைய மரணம் கொலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news'கடந்த ஏப்.3ம் தேதி ஜார்ஜ் பிளாய்டு அறிகுறி எதுவுமின்றி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். பிளாய்டின் நுரையீரல் ஆரோக்கியமாக இருந்தது . ஆனால் இதயத்தில் சில தமனிகள் சுருங்கி போயிருந்தன' என தலைமை மருத்துவ பரிசோதகரான ஆண்ட்ரூ பேக்கர் குறிப்பிட்டார். முந்தைய அறிக்கையில், பெண்டானில் போதைப்பொருள் மற்றும் மெத்தாம்பேட்டமைன் பயன்பாட்டை குறிப்பிடத்தக்க நிலையாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அது மரணத்திற்கான காரணம் இல்லையென கூறப்பட்டிருந்தது.

பெண்டானில் நச்சுத்தன்மையின் அறிகுறிகளில் கடுமையான தீவிர மூச்சுத்திணறல் மற்றும் வலிப்பு அடங்கும் என்று முழு அறிக்கையின் அடிக்குறிப்புகள் குறிப்பிடப்பட்டிருந்தது.
மினசோட்டா அட்டர்னி ஜெனரல் கீத் எலிசன், புதன்கிழமை டெரிக் சாவின் மீதான குற்றச்சாட்டுகளை கொலை குற்றமாக உயர்த்தியதோடு, மேலும் சம்பவ இடத்தில் இருந்த 3 போலீசாரும் அதற்கு உடந்தையாக இருந்ததாக சேர்த்தார்.

முன்னதாக வெளியான பிரேத பரிசோதனை அறிக்கையில் சாவினுக்கு எதிராக புகாரில் கூறப்பட்டிருந்த மூச்சுத்திணறலை நிராகரிப்பதாக பிளாய்டு குடும்ப வழக்கறிஞர் பென் கிரம்ப் அறிவித்தார். பிளாய்டு குடும்பத்தால் நியமிக்கப்பட்ட பிரேத பரிசோதனையில் , அவர் கழுத்து மற்றும் முதுகில் அழுத்தியதால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக இறந்ததாக முடிவுக்கு வந்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - london,யுனைடெட் கிங்டம்
05-ஜூன்-202000:14:32 IST Report Abuse
sankar தானாக போக ??/இருந்த திருடனை ... " தட்டி " போக வைத்ததுடன்???? தியாகியாக்கிய பெருமை அமெரிக்க போலீசை சாரும் ... அது சரி அப்பாவிகள் எப்போதும் இறந்து கொண்டுதான் இருக்கிறார்கள் .... இது போன்ற குற்றவாளிகள் இறக்கும் பொது மட்டும் நிலவரம் கலவரமாவது எல்லா நாடுகளிலும் " பொதுவான " நிகழ்வாக இருப்பது புரியாத புதிர்தான்
Rate this:
Cancel
Krishna - bangalore,இந்தியா
04-ஜூன்-202022:32:54 IST Report Abuse
Krishna Simply Encounter All Anti-People & Power-Misusing Police (Vast Majority) as they dont deserve to be Human Beings,And Servants of Supreme People
Rate this:
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
04-ஜூன்-202020:53:35 IST Report Abuse
Sanny போலீசாரை காப்பாற்ற எடுக்கும் செயல், ஜார்ஜ் இங்கு கொரோனா இருந்திருந்தால் அவரை கொன்ற போலீசாருக்கும் கொரோனா வந்து இருக்கணும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X