குவைத்தில் புதிதாக 562 பேருக்கு கொரோனா

Updated : ஜூன் 04, 2020 | Added : ஜூன் 04, 2020
Share
Advertisement

கெய்ரோ : கொரோனா வைரசின் பாதிப்பு அதிகரித்து குவைத்தில் மேலும் 562 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். 6 பேர் பலியாகினர் என அந்நாட்டின் சுகாதாரதுறை அறிவித்துள்ளது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது. நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. ஆயினும் குவைத்தில் ஒரே நாளில் 562 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் நாட்டில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 29,921 ஆக அதிகரித்தது. கொரோனா தொற்றால் நேற்று 6 பேர் பலியானதை யொட்டி, இதுவரை 236 பேர் பலியானதாக சுகாதாரதுறை தெரிவித்துள்ளது. நோய் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்ததாலும் பலருக்கு நோய் பரவியுள்ளது தெரிய வந்தது.


latest tamil news



குவைத்தில் நோய் பாதிப்புக்கு 184 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 1,473 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர். நாட்டில் இதுவரை 17,223 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இவ்வாறு சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X