11 தலிபான் பயங்கரவாதிகளை விடுவித்து 3 இந்திய இன்ஜி., மீட்பு| India released 11 Taliban terrorists in exchange for release of 3 engineers | Dinamalar

11 தலிபான் பயங்கரவாதிகளை விடுவித்து 3 இந்திய இன்ஜி., மீட்பு

Updated : ஜூன் 04, 2020 | Added : ஜூன் 04, 2020 | கருத்துகள் (4)
Share
UN report, United Nation,  Abducted, Indian engineers, freed, exchange, Taliban members, Taliban terrorists, Afghanistan, Afghan government, ஐநா, மீட்பு, தலிபான்

நியூயார்க்: சிறையில் இருந்த 11 தலிபான் பயங்கரவாதிகளை விடுவித்து, 2018 ம் ஆண்டு கடத்தி செல்லப்பட்ட, 3 இந்திய இன்ஜினியர்களை, கடந்த ஆண்டு மீட்டதாக ஐ.நா., தெரிவித்துள்ளது.

கடந்த 2018 மே மாதத்தில், வடக்கு பக்லான் மாகாணத்தில், ஆப்கன் அரசால் செயல்படுத்தப்பட்ட மின்சார திட்டத்தில் பணியாற்றிய இந்தியர்கள் 3 பேர் உட்பட 7 இன்ஜினியர்களை பயங்கரவாதிகள் கடத்தி சென்றனர். கடந்த ஆண்டு இந்திய இன்ஜினியர்கள் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்டனர். அவர்கள் எவ்வாறு மீட்கப்பட்டனர் என்ற தகவலை வெளியிட இந்திய அரசு மறுத்துவிட்டது.


latest tamil newsஇந்நிலையில், பக்ராம் விமான தளத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த 11 தலிபான் பயங்கரவாதிகளை விடுதலை செய்து. அதற்கு பதிலாக 3 இந்திய இன்ஜினியர்களை மீட்டதாக ஐ.நா., சபையின் பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில் தெரிய வந்துள்ளது. கடத்தப்பட்டவர்களில் மேலும் ஒருவர் கடந்த மார்ச்சில் மீட்கப்பட்டார். மற்ற மூவரின் கதி என்னவானது என்ற தகவல் இல்லை.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X