ஆரம்ப பள்ளிக்குள் நடந்த கத்தி தாக்குதலில் 39 பேர் காயம்!

Updated : ஜூன் 04, 2020 | Added : ஜூன் 04, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

பீஜிங் : தெற்கு சீனாவில் ஆரம்பப் பள்ளி ஒன்றிற்குள் நுழைந்த காவலாளி, கத்தியால் தாக்குதல் நடத்தியதில் 9 குழந்தைகள் உட்பட 39 பேர் காயமடைந்தனர்.



latest tamil news



தெற்கு சீனாவின் குவாங்சி ஜுவாங் தன்னாட்சி பிராந்தியத்தில் உள்ள வாங்ஃபு நகரில் தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. காலை 8:30 மணியளவில் வகுப்புகள் தொடங்குவதற்கு முன் மாணவர்கள் ஆஜராகி கலைந்து சென்றனர். அப்போது பள்ளிக்குள் நுழைந்த காவலாளி ஒருவர் எதிர்படுபவர்களை எல்லாம் கத்தியால் தாக்கியபடி சென்றுள்ளார்.இத்தாக்குதலில் 14 குழந்தைகள், பள்ளி தலைமையாசியர் உட்பட 39 பேர் காயமடைந்தனர். இருவரும் பலமாக கத்திக்குத்து விழுந்துள்ளது.


latest tamil news



தகவல் அறிந்து 8 ஆம்புலன்ஸ்களில் விரைந்த மருத்துவக் குழுவினர் அனைவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தாக்குதல் நடத்தியவர் 50 வயதான லி சியாமின் என்பது தெரியவந்துள்ளது. அவரை கைது செய்தனர். தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். அதிருப்தி அடைந்த ஊழியர்கள் அல்லது மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களால் சீன பள்ளிகளில் கத்தி தாக்குதல் நடைபெறுவது தொடர் கதையாகியுள்ளது. ஏப்ரல், 2018-ல், ஷாங்சி மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளிக்கு வெளியே இளைஞர் ஒருவர் நடத்திய கத்தி தாக்குதலில் 9 மாணவர்கள் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்தியவர் தூக்கிலிடப்பட்டார்.

அதே போல், அக்டோபர், 2018 இல், தென்மேற்கு சீனாவின் சோங்கிங் நகரில் சமையலறை கத்தியுடன் மழலையர் பள்ளிக்குள் நுழைந்த பெண் ஒருவர் 14 குழந்தைகளை குத்தினார். சமீபத்தில் 2019 ஜனவரியில் பெய்ஜிங் பள்ளியில் நடந்த கத்தி தாக்குதலில் 20 குழந்தைகள் காயமடைந்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundarsvpr - chennai,இந்தியா
04-ஜூன்-202021:23:05 IST Report Abuse
sundarsvpr பொது இடங்களுக்கு வருவதைவிட பாதுகாப்பான இடம் வீடுதான். பாதுகாப்பை மீறி அசம்பாவிதங்கள் நடக்கின்றன. இதுதான் வீதி. மஹாபாரத கதையில் ஒரு அரசனுக்கு பாம்பால் சாவு என்பது விதி. பலத்த பாதுகாப்பை மீறி பாம்பு தீண்டி சாவு. இது பூமியில் பிறந்த எல்லோருக்கும் பிறப்பு என்றால் சாவும் உண்டு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X