பொது செய்தி

இந்தியா

டில்லியில் வேகமாக பரவும் கொரோனா: கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அதிகரிப்பு

Updated : ஜூன் 04, 2020 | Added : ஜூன் 04, 2020
Share
Advertisement

புதுடில்லி: டில்லியில் வேகமாக கொரோனா பரவி வருவதையடுத்து அங்கு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது



latest tamil news



டில்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 1,500க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 23,645 ஆக உள்ளது. நாட்டிலேயே கொரோனா பாதிப்பில் மஹாராஷ்டிரா, தமிழகத்திற்கு அடுத்தபடியாக டில்லி 3வது இடத்தில் உள்ளது. இதுவரை 606 பேர் பலியாகி உள்ளனர்.


latest tamil news



டில்லயில் கொரோனா வேகமாக பரவி வருவதையடுத்து கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இரு வாரங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 2 மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளது. 15 நாட்களுக்கு முன் 58 ஆக இருந்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தற்போது 158 ஆக உயர்ந்துள்ளது. அங்கு இது வரை 9,542 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர் என்று மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X