அமீரக லாட்டரியில் ரூ.24 கோடி வென்ற இந்தியர்

Updated : ஜூன் 04, 2020 | Added : ஜூன் 04, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement

அபுதாபி: அமீரக லாட்டரியில் பேக்கரி ஊழியராக வேலை பார்க்கும் இந்தியர் ஒருவருக்கு ரூ 24 கோடி பரிசு கிடைத்துள்ளது.



latest tamil news



கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர் அசைன் முகமது. இவர் அமீரகத்தில் அஜ்மான் நகரில் பேக்கரி ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் நண்பா்களுடன் சேர்ந்து கூட்டாக லாட்டரி வாங்குவது வழக்கம். அப்போதெல்லாம் இவருக்கு பரிசு எதுவும் விழவில்லை. கடந்த மே 14ம் தேதி தனியாக ஆன்லைனில் 139411 என்ற எண்ணுடைய டிக்கெட்டை வாங்கியுள்ளார். இந்த எண்ணுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. இவர் ஒரே நாளில் ரூ 24.6 கோடிக்கு (12 மில்லியன் திர்ஹாம்) அதிபதியாகிவிட்டார்.


latest tamil news



இது குறித்து அசைன் முகமது கூறுகையில், 'எனக்கு லாட்டரி பரிசு குறித்து போன் வந்த போது போனில் உங்களுக்கு 12 மில்லியன் திர்ஹாம் பரிசு விழுந்துள்ளது என்றனர். முதலில் நண்பர்கள் என்னை கிண்டல் செய்து விளையாடுகிறார்கள் என்று நினைத்தேன். பின்னர், ஆன்லைன் இணையதளத்தில் தேடிய போது நான் வாங்கிய டிக்கெட்டுக்கு பரிசு விழுந்துள்ளதை அறிந்தேன். பின் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போனேன். இவ்வளவு பணத்தை வைத்து நான் என்ன செய்யப் போகிறேன் என தெரியவில்லை' என கூறினார். ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன அசைன் முகமதுவுக்கு ஆஷிபா என்ற மனைவியும் இரு பெண் குழந்தைகளும் உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
05-ஜூன்-202012:51:28 IST Report Abuse
NicoleThomson நான்காய் பிரித்து இரு பெண் குழந்தைகளுக்கு முதலீடு செய்து உங்கள் பணத்தில் பேக்கரியை ஆரம்பியுங்க , அதே போல உங்களது பணத்தை களவாண்டு போக மதத்தின் பெயராலும் நட்பின் பெயராலும் உறவின் பெயராலும் வருவாங்க உஷாரு
Rate this:
Cancel
vasan - doha,கத்தார்
05-ஜூன்-202012:47:10 IST Report Abuse
vasan சுயநலமாக மட்டுமே இல்லாமல் அனாதை குழந்தைகள், முதியவர்களுக்கு இயன்றவரை உதவிகள் செய்யலாம்.. கடவுள் அவர்கள் ஆசீர்வாதம் மூலமாக மன நிம்மதியை உங்களுக்கு கொடுப்பார் சுற்றி இருப்பவர்களின் துயரை துடையுங்கள்... உங்கள் சந்ததிகள் நலமாக இருக்கும்
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
05-ஜூன்-202010:56:58 IST Report Abuse
S.Baliah Seer ஹுசைன் ஒரு தொழிலாளியாய் இருந்து கஷ்டப்பட்ட உமக்கு கிடைத்த இந்த யோகம் பொன்னானது.அடுத்தவர் பேச்சை கேட்காமல் நீர் பார்த்த அதே பேக்கரி தொழிலை சொந்தமாக நடத்துங்கள். இதனால் சிலருக்கு உங்களால் வேலை கொடுக்க முடியும். அதே சமயம் உழைத்து அனுபவம் இருப்பதால் உங்களுக்கு இந்த பேக்கரி தொழிலில் நஷ்டம் வர வாய்ப்பே இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X