பொது செய்தி

இந்தியா

வந்தே பாரத் திட்டத்தில் மேலும் 38,000 வெளிநாடு வாழ் இந்தியர்கள் மீட்கப்படுவார்கள்

Updated : ஜூன் 04, 2020 | Added : ஜூன் 04, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

புதுடில்லி: வந்தே பாரத் திட்டத்தின் கீழ் மேலும் 38,000 இந்தியர்கள் வெளிநாடுகளிலிருந்து மீட்கப்படுவார்கள் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது



latest tamil news



கொரோனா பரவல் காரணமாக பல நாடுகளில் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் பல்வேறு நாடுகளில் பணிபுரிந்து வந்த ஆயிரக்கணக்கான இந்தியர்கள் இந்தியா திரும்ப முடியாமல் தவித்து வந்தனர். அவர்களை மீட்க மத்திய அரசு வந்தே பாரத் திட்டத்தினை கொண்டு வந்தது. இரண்டு கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தில் இதுவரை 1,07, 123 இந்தியர்கள் வெவ்வேறு நாடுகளிலிருந்து சிறப்பு விமானங்கள் மூலம் அழைத்து வரப்பட்டனர். இத்திட்டத்தின் மூன்றாவது கட்டத்தில் மேலும் 38,000 இந்தியர்கள் அழைத்து வரப்படுவார்கள் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


latest tamil news


இதுகுறித்து பேசிய மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா, ' வந்தே பாரத்தின் இரண்டாம் கட்டத்தில், மே 17 முதல் ஜூன் 13 வரை 103 சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன. இந்நிலையில் வந்தே பாரத் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தில் 31 நாடுகளிலிருந்து 337 விமானங்கள் மூலமாக 38,000 இந்தியர்கள் அழைத்து வரப்பட இருக்கிறார்கள்' இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
05-ஜூன்-202012:15:27 IST Report Abuse
வாய்மையே வெல்லும் பஹ்ரைனில் இருந்து பதினான்காயிரம் இந்தியர்கள் நாடு திரும்புவது இதில் அடக்கம். இது அந்நாட்டு தினசரி செய்திகளில் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X