2014-க்கு பிறகு மோசமான வருவாய் இழப்பை சந்தித்துள்ள இந்திய நிறுவனங்கள்!

Updated : ஜூன் 04, 2020 | Added : ஜூன் 04, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
புதுடில்லி : உலகின் மிகப்பெரிய ஊரடங்கின் காரணமாக பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு 6 ஆண்டுகளில் இல்லாத வருவாய் இழப்பை இந்திய நிறுவனங்கள் சந்தித்துள்ளதை நிறுவனங்களின் காலாண்டு அறிக்கை தெரிவிக்கின்றன. ப்ளூம்பெர்க் தொகுத்த தரவுகளின்படி, தேசிய பங்குசந்தையான நிஃப்டி 50-ல் பட்டியலிடப் பட்டுள்ள 50 முன்னணி நிறுவனங்களின் லாபம், சென்ற ஆண்டை காட்டிலும் சுமார் 15%

புதுடில்லி : உலகின் மிகப்பெரிய ஊரடங்கின் காரணமாக பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு 6 ஆண்டுகளில் இல்லாத வருவாய் இழப்பை இந்திய நிறுவனங்கள் சந்தித்துள்ளதை நிறுவனங்களின் காலாண்டு அறிக்கை தெரிவிக்கின்றன.latest tamil news


ப்ளூம்பெர்க் தொகுத்த தரவுகளின்படி, தேசிய பங்குசந்தையான நிஃப்டி 50-ல் பட்டியலிடப் பட்டுள்ள 50 முன்னணி நிறுவனங்களின் லாபம், சென்ற ஆண்டை காட்டிலும் சுமார் 15% வீழ்ச்சியடைந்துள்ளது. மார்ச் காலாண்டிற்கான முடிவை குறியீட்டில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு நிறுவனங்கள் இதுவரை அறிவித்துள்ளன. தகவல்தொடர்புகள், எரிசக்தி மற்றும் தொழிற்சாலை துறை சார்ந்த நிறுவனங்கள் செங்குத்தான சரிவுகளை பதிவு செய்துள்ளன. மார்ச் 2021 வரையிலான ஒட்டுமொத்த நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5% சுருங்கிவிடும், இது இந்தியாவின் மிகப்பெரிய மந்தநிலையாக இருக்கும் என்று கோல்ட்மேன் சாச்ஸ் குழுமம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் ஆய்வாளர்கள் நிஃப்டி 50-க்கான வருவாய் கணிப்புகளைக் குறைத்துள்ளனர். பெரிய கடன் இழப்புகளுக்கு எதிராக தங்களைக் காப்பாற்றிக்கொள்ள அதிக பணத்தை ஒதுக்கியுள்ளதால், அனைத்து வங்கிகளும் மதிப்பீடுகளை தவறவிட்டுள்ளன. ஊரடங்கினால் பணம் செலுத்துபவர்கள் தாமதிப்பது மற்றும் தள்ளுபடி கோருவதால் நிஃப்டி 50-ல் பட்டியலிடப்பட்டுள்ள 5-ல் இரண்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் வருவாய் இழந்துள்ளன. குறியீட்டின் மிகப்பெரிய பங்கான ரிலையன்ஸ் தொழில் நிறுவனம் 40% லாபத்தை இழந்துள்ளது. பாரதி ஏர்டெல் நிறுவனம் ரூ.5200 கோடி இழப்பை சந்தித்துள்ளதாக பதிவு செய்துள்ளது.


latest tamil newsதொடர்ந்து நான்காவது காலாண்டாக இந்நிறுவனம் இழப்பை சந்திக்கிறது. கட்டுமான பங்குகளான அல்ட்ராடெக் சிமெண்ட் மற்றும் ஸ்ரீ சிமெண்ட் நிறுவனங்கள் மிகப்பெரிய லாபம் ஈட்டியுள்ளது. இது தவிர சுகாதார மற்றும் நுகர்வோர் துறை வளர்ச்சி கண்டுள்ளது. பொருளாதாரம் மீண்டும் திறக்கப்படுவதால் தொலைத்தொடர்பு மற்றும் நுகர்வோர் துறை சிறப்பாக செயல்படும் என்று ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishna - bangalore,இந்தியா
05-ஜூன்-202013:09:25 IST Report Abuse
Krishna ELECTED REPS WONT FORGET SUPREME PEOPLE, Reduce & Compel VVV Fattened Officials to Work for People, No Time to Loot, Form HiPowered & Broader PEOPLE'S COMMITTEES (Only non-sheepish Loksabha MPs-MLAs-Counsillors-51% All Oppositions incl. Ex if Unavailable) To ADMINISTER ALL PEOPLE'S LIFE Incl. JUSTICE.
Rate this:
Cancel
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
05-ஜூன்-202012:08:21 IST Report Abuse
மதுரை விருமாண்டி பாவம் ஓரிடம், பழி ஓரிடம்ன்னு சொல்லுவாய்ங்க.
Rate this:
Cancel
Krishna - bangalore,இந்தியா
05-ஜூன்-202011:02:12 IST Report Abuse
Krishna All Oppositions incl. Ex if Unavailable) To ADMINISTER ALL PEOPLE'S LIFE Incl. JUSTICE.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X