தெலுங்கானாவில் புதிதாக 127 பேருக்கு கொரோனா| Dinamalar

தெலுங்கானாவில் புதிதாக 127 பேருக்கு கொரோனா

Updated : ஜூன் 04, 2020 | Added : ஜூன் 04, 2020 | கருத்துகள் (2)
Share

ஐதராபாத் : தெலுங்கானாவில் கொரோனா பாதிப்புகளால் இன்று 127 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டது. 6 பேர் பலியாகினர். இவ்வாறு சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.



latest tamil news



இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது. தெலுங்கானாவில் நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த முதல்வர் சந்திரசேகர ராவ் பல்வேறு கட்ட நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பாக இன்று அம்மாநில சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்ததாவது : மாநிலத்தில் இன்று அதிகரித்த நோய் பாதிப்புக்கு 127 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் மாநிலத்தில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 3,147 ஆக உயர்ந்தது. நோய் பாதிப்புக்கு 6 பேர் புதிதாக பலியானதை தொடர்ந்து, மொத்தமாக பலியானவர்களின் எண்ணிக்கை 105 ஆக உள்ளது.


latest tamil news



புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 110 பேர் ஐதராபாத் நகர பகுதிகளிலும், 7 பேர் அடிலாபாத்திலும், 6 பேர் ரங்காரெட்டியிலும், 2 பேர் மேட்சலிலும், சங்காரெட்டி மற்றும் கம்மம் பகுதியில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிதாக 31 பேர் குணமடைந்ததையொட்டி, மொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,587 ஆக உயர்ந்தது. தற்போது 1,455 பேர்நோய் பாதிப்புகளுடன் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X