பொது செய்தி

இந்தியா

பிரதமர் நிவாரண நிதி விபரம் : ஆர்.டி.ஐ.,யில் வெளியிட மனு

Updated : ஜூன் 06, 2020 | Added : ஜூன் 04, 2020 | கருத்துகள் (35)
Share
Advertisement
புதுடில்லி; கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அமைக்கப்பட்ட, 'பி.எம்.கேர்ஸ்' நிதியத்திற்கு வழங்கப்படும் நன்கொடை குறித்த தகவல்களை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வெளியிட உத்தரவிடுமாறு, டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மார்ச், 28ல், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக, 'பி.எம்.கேர்ஸ்' என்ற நிவாரண நிதியம், பிரதமர் நரேந்திர மோடியால்
 பிரதமர், நிவாரண நிதி, விபரம் , ஆர்.டி.ஐ.,யில்,வெளியிட,மனு

புதுடில்லி; கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அமைக்கப்பட்ட, 'பி.எம்.கேர்ஸ்' நிதியத்திற்கு வழங்கப்படும் நன்கொடை குறித்த தகவல்களை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வெளியிட உத்தரவிடுமாறு, டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மார்ச், 28ல், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக, 'பி.எம்.கேர்ஸ்' என்ற நிவாரண நிதியம், பிரதமர் நரேந்திர மோடியால் துவங்கப்பட்டது. நன்கொடைஇதையடுத்து, பிரபலங்கள், அரசு ஊழியர்கள், தனிநபர்கள் என பலரும், இந்த நிதியத்திற்கு நன்கொடை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த நிதியத்திற்கு வழங்கப்படும் நன்கொடை குறித்த தகவல்களை வெளியிட உத்தரவிடுமாறு, டில்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் சுரேந்தர் சிங் ஹூடா தாக்கல் செய்த அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: சமீபத்தில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ், 'பி.எம்.கேர்ஸ்' நிவாரண நிதியத்திற்கு, நன்கொடையாக வழங்கப்படும் பணம் குறித்த தகவல்களை, ஹர்ஷா குந்தகர்னி என்பவர் கோரினார். ஆனால், அதை வெளியிட மறுத்த பிரதமர் அலுவலகம்,'இந்த நிதியம், பொது அதிகாரத்தின் கீழ் வராது' என்றும் தெரிவித்தது. பிரதமரின் நிவாரண நிதியம், பொது அதிகாரத்தின் கீழ் தான் வரும்.

ஆகையால், இந்த நிதியத்திற்கு கிடைக்கும் பணம், செலவிடப்படும் விபரங்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் அரசு வெளியிட வேண்டும்.நிதியத்தை நிர்வகிக்கும் உறுப்பினர்கள், மக்கள் நலனுக்காக உழைப்பதாகவும், தனிப்பட்ட நலனுக்காக பணியாற்றவில்லை என்றும் அதன் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ரகசியம் எதற்கு?

பொது காரணத்திற்காக அமைக்கப்பட்டுள்ள இந்த நிதியத்தில், ரகசியம் எதற்கு?வைரசால் பாதிக்கப்பட்டோரிடம் பணம் இல்லாததால், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை சிகிச்சைகளும் கிடைப்பதில்லை. பிரதமரின் நிவாரண நிதியம் இருந்தும், அவர்களுக்கு என்ன பயன்?இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.அவசர வழக்காக விசாரிக்கக்கோரிய இந்த மனு, வரும், 10ம் தேதி, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் விசாரிக்க, டில்லி உயர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராஜா - Chennai,இந்தியா
05-ஜூன்-202017:46:17 IST Report Abuse
ராஜா உண்மையை வெளியிட்டால் இங்கிருக்கும் சிலரின் கருத்துக்களுக்கு அவர்கள் வெட்கப்பட வேண்டும். மக்கள் பணத்தில் ஊழல் செய்ய இது ஒன்றும் கேடுகெட்ட காங்கிரஸ், திமுக ஆட்சி அல்ல.
Rate this:
RAJI NATESAN - ஹிந்து என்று சொல்லும் தமிழன் ,இந்தியா
05-ஜூன்-202019:04:42 IST Report Abuse
RAJI NATESANPM CARE een thodanganum...
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
05-ஜூன்-202015:37:02 IST Report Abuse
ஆரூர் ரங் மன்மோகன் பிரதமர் ஆன உடனே நன்றிக்கடனாக சோனியா குடும்பத்தின் ராஜீவ் ஃபவுண்டேஷனுக்கு பட்ஜெட்டிலிருந்து நேரடியாக நூறு கோடி அள்ளிக்கொடுதார்.அந்த பவுண்டேஷன் கணக்கு சி ஏ ஜி தணிக்கைக்கு வராது .அரசுக்கும் கணக்கே காட்டவேண்டியதில்லை. கட்சிக்கே ஒதுக்கிக்கொண்டாலும் கேள்வியில்லை இப்போ பி எம் கேர் கூடாதாம்..இப்போ அதே சோனியா உறுப்பினராக உள்ள பிரதமர் நிவாரண நிதிக்கு கொடுத்தால்போதுமாம். ஏன்?. ஒவ்வொரு நிவாரண நிதி உதவி செலவுக்கும் அவங்ககிட்ட கையேந்தி அனுமதி பெறணுமா? .இருமுறை மக்களால் நிராகரிக்கப்பட்டு எதிர்க்கட்சி அந்தஸ்துகூட இல்லாத பிறப்பால் அந்நியர் ஒருவர் ஆடும் ஆட்டத்தை பாருங்க .வெள்ளையனே ஒழிந்தாலும் வெள்ளையர் அடிமை மனப்பான்மை நம்ம 30 %ஆட்களிடமிருந்து ஒழிய மாட்டேங்குது
Rate this:
Rajas - chennai,இந்தியா
05-ஜூன்-202016:36:48 IST Report Abuse
Rajasநேரு ஆரம்பித்த PMNRF விவசாயத்திற்கு வருவோம். பிரதமர் தான் PMNRF ன் தலைவர், பிரதமரின் Joint Secretary தான் இதை நிர்வகிக்கிறார். அவருக்கு துணையாக டைரக்டர் என்று ஒருவரும் இதர ஊழியர்களும் இருக்கிறார்கள் என்று மத்திய அரசின் வெப்சைட்டில் இப்போதும் இருக்கிறதே. அதில் எங்குமே காங்கிரஸ் பெயரோ அல்லது சோனியா பெயரோ வரவில்லையே. அது எப்படி. மோடி பதவி ஏற்ற 2014 லிருந்து 2019 வரை 2122 கோடி ரூபாயை டொனேஷனாக பெற்றிருக்கிறார்கள். அந்த நிறுவன கணக்கில் இருந்து ரூபாய் 1595 கோடி ரூபாயை இடர்களுக்குக்காக மக்களுக்கு கொடுத்திருக்கிறார்கள்....
Rate this:
Rajas - chennai,இந்தியா
05-ஜூன்-202016:39:24 IST Report Abuse
Rajasஒரு சேலஞ். அந்த PMNRF நிர்வாகத்தில் எங்கே சோனியா இருக்கிறார் என்று ஆதாரத்தோடு சொல்ல முடியுமா...
Rate this:
RAJI NATESAN - ஹிந்து என்று சொல்லும் தமிழன் ,இந்தியா
05-ஜூன்-202019:08:26 IST Report Abuse
RAJI NATESANஇவர் எப்பவுமே இப்படித்தான் இவர் சாயம் WAIVER /WRITE OFF என்று பீலா விடும்போது இவர் சாயம் வெளுத்து விட்டது இவர் நுனி புள் மேயும், வாயில் வடை சுடுவார்...
Rate this:
Cancel
RAJI NATESAN - ஹிந்து என்று சொல்லும் தமிழன் ,இந்தியா
05-ஜூன்-202013:56:43 IST Report Abuse
RAJI NATESAN ஒரு இடத்தில IT ரைட் வருகிறது என்றால் அந்த OWNER ACCOUNT SUBMIT பண்ண தயங்கினால் ஏதோ தில்லு முள்ளு உள்ளது என்று தான் அர்த்தம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X