பொது செய்தி

இந்தியா

பின்வாங்கியது!காஷ்மீரின் லடாக் பகுதியில் சீன ராணுவம்:அதிகாரிகள் பேச்சுக்கு கிடைத்தது பலன்

Updated : ஜூன் 06, 2020 | Added : ஜூன் 04, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement
பின்வாங்கியது!காஷ்மீரின் லடாக் பகுதியில் சீன ராணுவம்:அதிகாரிகள் பேச்சுக்கு கிடைத்தது பலன்

புதுடில்லி:எல்லையில் நிலவும் பதற்றத்துக்கு தீர்வு காணும் விதமாக, இந்திய - சீன அதிகாரிகள் தொடர்ந்து பேச்சு நடத்தியதற்கு பலன் கிடைத்துள்ளது. லடாக் பகுதியில், சீன ராணுவ வீரர்கள், 2 கி.மீ., துாரம் பின்வாங்கிச் சென்றனர்.

நம் அண்டை நாடான சீனா, எல்லை பிரச்னையில், நம்முடன் தொடர்ந்து மோதல் போக்கை பின்பற்றி வருகிறது. நம் நாட்டின் வட கிழக்கு மாநிலங்களின் சில பகுதிகளை, தங்களுக்கு சொந்தமானது என, சீனா கூறி வருகிறது. இந்நிலையில், காஷ்மீரின் லடாக் பகுதியில், சமீபத்தில், சீன வீரர்கள், நம் எல்லை பகுதி அருகில் அத்துமீறி நுழைந்தனர். இதற்கு, நம் வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் உருவாகி, கைகலப்பு ஏற்பட்டது.

நம் நாட்டின் சிக்கிம் மாநிலத்தின் எல்லை அருகிலும் சீன வீரர்கள் இதுபோன்ற அத்துமீறலில் ஈடுபட்டனர். நம் எல்லைக்கு அருகில், சீன விமானப் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் கண்காணிப்பில் ஈடுபட்டது. 'லடாக் பகுதியில், எல்லைக்கு அருகில், இந்திய ராணுவம் கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே, கண்காணிப்பில் ஈடுபட்டோம்' என, சீன ராணுவம் தெரிவித்தது.

பதிலடியாக, நம் ராணுவமும், ஹெலிகாப்டர் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டது. இதையடுத்து, எல்லையில் இரு நாட்டு வீரர்களும் குவிக்கப்பட்டனர். இரு தரப்பிலும், தலா, 5,000 வீரர்கள் குவிந்தனர். போர் தளவாடங்களும் குவிக்கப்பட்டதால், எல்லையில் பதற்றம் நிலவியது.


முணுமுணுப்பு'இந்திய - சீன எல்லை விவகாரத்தில், இரு தரப்புக்கும் இடையே சமரசம் செய்து வைக்க தயார்' என, அமெரிக்கா கூறியதால், இது, சர்வதேச விவகாரமாக உருவெடுத்தது.

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே போர் மூளுமோ என, உலக நாடுகள் கவலையுடன் முணு முணுத்தன. அதேநேரத்தில், 'எல்லை பிரச்னையை இரு தரப்புமே சுமுகமாக பேசி தீர்ப்போம். இதில், அமெரிக்கா தலையிட வேண்டிய அவசியமில்லை' என, இரு நாடுகளுமே தெரிவித்தன. இதற்கிடையே, எல்லை பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக, இரு தரப்புமே தொடர்ந்து பல சுற்றுக்களாக பேச்சு நடத்தி வந்தன. இதற்கு பலன் கிடைத்துள்ளது.லடாக்கின், கல்வான் நலா பகுதியில் குவிக்கப்பட்டிருந்த சீன வீரர்கள், 2 கி.மீ., துாரத்துக்கு பின் வாங்கிச் சென்றதாக, ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும், கடந்த நான்கு நாட்களாகவே, எல்லை பகுதியில் சீன ராணுவம் எந்தவிதமான அத்து மீறலிலும் ஈடுபடவில்லை.


நேரடி பேச்சுஅடுத்த சில நாட்களில், இந்த விவகாரத்தில் மேலும் முன்னேற்றம் ஏற்படும் என்றும், எல்லை பகுதியில் குவிக்கப்பட்டுள்ள இரு நாட்டு ராணுவ வீரர்களும் பின்வாங்கிச் செல்வர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், இரு நாட்டு ராணுவ அதிகாரிகள், நாளை நேரடியாக பேச்சு நடத்தவுள்ளனர். இதில், எல்லை பிரச்னைக்கு சுமுகமாக தீர்வு காணப்பட்டு, பதற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான, எல்.ஏ.சி., எனப்படும், உண்மையான கட்டுப்பாடு கோடு பகுதி தொடர்பாக, 1993ல், ஒரு வரையறை உருவாக்கப்பட்டது. அப்போது, இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடும் பகுதியாக, 23 பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதில், மேற்கு பகுதியில், லடாக் பகுதி இடம் பெற்றுள்ளது. ஆனால், சீன ராணுவம் தற்போது படைகளை குவித்துள்ள கல்வான் மற்றும் ஹாட் ஸ்பிரிங் ஆகிய இரண்டு பகுதிகளும் இதில் இடம்பெறவில்லை. உரிமை கோரும் சர்ச்சைக்குரிய பகுதிகள் என அடையாளம் காணப்படாத இடங்களில் சீன ராணுவம் படைகளை குவித்தது தான், தற்போது நம் தரப்புக்கு அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது. நாளை நடக்கவுள்ள ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சில், இது குறித்தும் விவாதிக்கப்படும் என தெரிகிறது.


காஷ்மீரில் விமான தளம்

காஷ்மீரின் லடாக் பகுதியில், பதற்றம் நிலவி வரும் நிலையில், அனந்த்நாக் மாவட்டத்தில் அவசர கால விமான தளத்தை அமைக்கும் பணியில் மத்திய அரசு தீவிரமாக இறங்கி உள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இதற்கான கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. 3.5 கி.மீ., நீளமுள்ள இந்த விமான ஓடுபாதையில், போர் விமானங்களை எளிதாக தரையிறக்க முடியும். இந்த விமான தளத்தை அமைப்பதற்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி தேவையில்லை என்பதால், கட்டுமான பணிகள் விரைவில் முடிவடைய வாய்ப்புள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் கூறுகையில், 'இந்த விமான தள கட்டுமான பணிகள் ஏற்கனவே துவங்கப்பட்டு விட்டன.'இந்திய - சீன எல்லையில் தற்போது நிலவும் பிரச்னைக்கும், இந்த விமான தள கட்டுமான பணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை' என்றனர். காஷ்மீரில் ஏற்கனவே, அவந்திபுரா, ஸ்ரீநகர் ஆகிய இடங்களில், விமானப் படை விமான தளங்கள் உள்ளன. தற்போது அமைக்கப்படுவது, மூன்றாவது விமான தளம்.

Advertisement


வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
unmaitamil - seoul,தென் கொரியா
05-ஜூன்-202014:18:30 IST Report Abuse
unmaitamil தான் எதிர்கட்சி அனுதாபி என்ற எண்ணத்தில் இங்கு சிலர் கண்மூடித்தனமாக, நாட்டின் பாதுகாப்பு பற்றி, ராணுவ நடவடிக்கை பற்றி மோசமாக கருத்து எழுதுகிறார்கள். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், நம் நேர்மையான, திறமையான ராணுவம் ஒன்றுதான். ராணுவத்தை பற்றி தவறாக எழுதுவது, தன் தாயையும், மகளையும் பற்றி தவறாக எழுதுவதற்கு சமம். இனியாவது நமக்காக கஷ்டப்பட்டு, நம்மை பாதுகாக்கும் நம் ராணுவத்தை குறைகூறாது வாழ கற்றுக்கொள்வோம்.
Rate this:
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
05-ஜூன்-202012:50:47 IST Report Abuse
Chandramoulli Anyone is passing wrong comments against the govt actions should be punished.
Rate this:
பூணுல் போட முடியாத ஹிந்து (தமிழன்) - ஹிந்து என்று சொல்லும் தமிழன் ,இந்தியா
05-ஜூன்-202015:52:41 IST Report Abuse
பூணுல் போட முடியாத ஹிந்து (தமிழன்)if any govt give false inforamtion then who will punish why this like situation arises when modi govt in serious condition repetedly...
Rate this:
Cancel
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
05-ஜூன்-202012:02:33 IST Report Abuse
Dr. Suriya பார்த்துங்க...இந்த சீனா பயலுவோ இப்பிடிக்க போக்கு காட்டி அப்படிக்க பாகிஸ்தான் தீவிரவாதிகளை உள்ள அனுப்ப போடற திட்டமா கூட இருக்கலாம்....நாம கவனத்தை திசை திருப்பும் வேலை....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X