பொது செய்தி

இந்தியா

தாயகம் திரும்பியோருக்கு வேலை மத்திய அரசு திட்டம் துவக்கம்

Updated : ஜூன் 05, 2020 | Added : ஜூன் 05, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement

புதுடில்லி: வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள், வேலைவாய்ப்பு பெறும் வகையில், மத்திய அரசு, புதிய திட்டத்தைத் துவக்கியுள்ளது.கொரோனா பரவல் காரணமாக, வெளிநாடுகளில் சிக்கிய மற்றும் வேலைவாய்ப்புகளை இழந்த இந்தியர்கள், சிறப்பு விமானங்கள் மூலம், தாயகம் திரும்பி வருகின்றனர்.latest tamil newsதிறன் மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஐக்கிய அரபு நாடுகள், ஓமன், சவுதி அரேபியா, குவைத், கத்தார் உள்ளிட்ட நாடுகளில் இருந்து மட்டும், 80 ஆயிரம் இந்தியர்கள், திரும்பியுள்ளனர். எண்ணெய், எரிவாயு, சுற்றுலா, கட்டுமானம், தானியங்கி, போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், விருந்தோம்பல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில், இவர்கள் பணிபுரிந்து வந்தனர்.அமெரிக்கா, சிங்கப்பூர், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் பலர் வேலையிழந்து திரும்பியுள்ளனர்.


latest tamil newsஇந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களில் திறன் வாய்ந்த பணியாளர் விபரங்களை, வேலைவாய்ப்பு தருவதற்காக திரட்டும், 'ஸ்வதேஸ்' எனப்படும் திட்டத்தை, மத்திய அரசு துவக்கியுள்ளது. இதற்கான, www.nsdcindia.org/swades என்ற இணையதளம் வாயிலாக, இவர்களது விபரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன. பணி மற்றும் திறன் விபரம், அனுபவம் போன்றவற்றை, இதற்கான படிவத்தில் பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
senthil kumar kasinathan - mannargudi,இந்தியா
05-ஜூன்-202015:02:20 IST Report Abuse
senthil kumar kasinathan வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் மேல்மட்டத்தில் உள்ளவர்கள் நீங்கள் குறிப்பிடுவதுபோல நிறைய சம்பாதிக்கிறார்கள் அவர்கள் குடும்பம் மற்றும் குழந்தைகள் உடன் இருக்கிறார்கள். அனால் கட்டுமானம் மற்றும் இதர தொழிலாளர்கள் பொருள் ஈட்டுவதோ ஏதோ கொஞ்சம், அவர்களின் வழியும் வேதனையும், மன உளைச்சலும் சொல்லி மாளாது. வாழ வேண்டிய வயதில் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளிநாட்டுக்கு வந்து வாழ்க்கையும், வாலிபத்தையும் தொலைத்து நடை பிணமாக வாழ்பவர்கள் ஏராளம். சரி வெளிநாட்டு வாழ்க்கையை முடித்து கொண்டு சொந்த நாட்டில் வேலைதேடிக்கொண்டு வாழலாம் என்று யோசிக்கும்போது வயது முப்பத்தைந்தை தண்டி இருக்கும் அரசு வேலை கிடைக்காது, தனியார் வேலை கொடுத்தாலும் சம்பளம் குறைவாகவே கிடைக்கும் அதை கொண்டு குடும்ப செலவு குழந்தைகளின் கல்விக்கட்டணம் எதையும் பூர்த்தி செய்ய முடியாது. வெளிநாட்டில் வேலை தேடி ஒரு முறை வந்தால் அந்த வாழ்க்கையில் இருந்து மீண்டு வருவது கடினம், நாங்கள் ஈட்டிய பொருள் சொற்பம் அனால் இழந்தது சொல்ல வார்த்தைகள் இல்லை. அனுபவித்தவர்களுக்கே தெரியும்.
Rate this:
Cancel
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
05-ஜூன்-202012:54:54 IST Report Abuse
NicoleThomson அப்போ அங்கே சம்பாதித்ததை இங்குள்ளோருக்கு பகிர்ந்து கொடுப்பார்களா?
Rate this:
Cancel
vayalum vazhvum-saravanan - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
05-ஜூன்-202011:48:21 IST Report Abuse
vayalum vazhvum-saravanan வெளிநாட்டில் வேலை செய்பவர் மீது உங்களுக்கு ஏன் இந்த கோபம் நண்பர்களே நாங்கள் வெளிநாட்டில் வேலை செய்ய பேராசை மட்டுமே காரணம் இல்லை, எங்களுக்கு சரியான வாய்ப்பு இந்தியாவில் உங்களுக்கு கிடைத்தது போல கிடைத்து இருந்தால் நாங்கள் ஏன் வெளி நாடு போக வேண்டும் நீங்கள் நினைப்பது போல நாங்கள் சம்பாதிப்பதை எங்களுக்கு மட்டுமே செலவு செய்ய வில்லை எங்களால் தான் இந்தியாவின் பணமதிப்பு அதிகம் ஆகிறது , மாதத்தில் முதல் வாரத்தில் பாருங்கள் இந்தியாவின் பணமதிப்பு எவ்வாறு அதிகமாகிறது என்று எல்லாமே நாங்கள் அனுப்பும் பணத்தால் தான் அதனால் என்ன லாபம் என கேட்கலாம் 01 -பெட்ரோல் மற்றும் இறக்குமதியில் இந்தியாவின் அந்நிய செலவாணி மதிப்பில் இழப்பு குறைக்க படுகிறது 02 - உள் நாட்டில் உற்பத்தியாகும் பொருளின் விற்பனை கூடுகிறது 03 - வீடு மற்றும் கட்டுமான தொழில் வளர்ச்சி அடைகிறது 05 - இன்றைக்கு இயற்கை விவசாயம் செய்பவர்களில் பெரும்பாலானோர் வெளி நாடு வாழ் இந்தியர்கள் தான் 06 - சுற்றுலா துறை இன்மை எவ்வளவோ சொல்லலாம் எனவே எங்கள் மீது அன்பை காட்டுங்கள் வெறுப்பை அல்ல
Rate this:
மனதில் உறுதி வேண்டும் - மதராஸ்:-),இந்தியா
05-ஜூன்-202012:49:44 IST Report Abuse
மனதில் உறுதி வேண்டும் ammam nee naal sambipaa inge idam vaangi potituduva appuram inge vandhu enn ur idhu enru peela veru uduva thirumbi eppo odalam enru iruppa appuram ingeye padhithu inge ullavani thaane kavanikkanum...
Rate this:
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
05-ஜூன்-202017:59:56 IST Report Abuse
தமிழ்வேள்சரவணன், வெறுப்புக்கு காரணம், அவர்கள் நடந்துகொள்ளும் முறை, வெட்டி பந்தா..அதுதான்...வெளிநாட்டில் வேலை பார்த்து திரும்பியவர்கள் என்றால், இவர்கள் வேலை பார்த்த வெளிநாடு போல இங்கும் வாழ்க்கை முறை இருக்கவேண்டும் என எதிர்பார்ப்பது என்ன நியாயம்? இந்த மண்ணை ஏன் கேவலமாக பேசவேண்டும்? இங்கு வாழ வழியில்லை என்று வெளியேபோனவர்கள், அங்கு வழியில்லை என்று திரும்பி வரும்போது, இந்த நாட்டின் கண் உள்ளவற்றை ஏற்கவேண்டும் தானே? விமரிசனம் செய்வது ஏன்? தாங்கள் தங்கத்தொட்டிலில் வாழ்ந்தது போலவும், வேறு வழியின்றி, இந்த நாட்டுக்கு வேண்டாவெறுப்பாக வருவது போலவும் எத்ற்கு பில்ட் அப்?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X