பொது செய்தி

இந்தியா

தப்லிகி ஜமாத்தின் 2,550 பேருக்கு இந்தியா வர 10 ஆண்டு தடை

Updated : ஜூன் 06, 2020 | Added : ஜூன் 05, 2020 | கருத்துகள் (23)
Share
Advertisement
தப்லிகி ஜமாத்தின் 2,550 பேருக்கு இந்தியா வர 10 ஆண்டு தடை

புதுடில்லி:டில்லியில் நடந்த தப்லிகி ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற, 40க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த, 2,550 பேரை, கருப்பு பட்டியலில் வைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, இந்திய வர, அவர்களுக்கு, 10 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

டில்லியில், முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள நிஜாமுதீன் பகுதியில் மார்ச், 8 -- 10ம் தேதிகளில், தப்லிக் ஜமாத் அமைப்பின் மாநாடு நடந்தது. இதில், நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், மலேசியா, வங்கதேசம், இந்தோனேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

வெளிநாடுகளை சேர்ந்தவர்கள், சுற்றுலா விசாவில் இந்தியாவுக்கு வந்து, இங்கு மதம் தொடர்பான பணிகளை செய்து வந்தது தெரிந்தது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த, 'ஓரிடத்தில் அதிகமானோர் கூடக் கூடாது' என, டில்லி போலீசார் விதித்த தடையை மீறி, இந்தக் கூட்டம் நடந்தது.இந்த கூட்டத்தில் பங்கேற்ற பலரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். வெளிநாடுகளில் இருந்து வந்த பலரும், கொரோனா தொற்றுடன், இந்த மாநாட்டில் பங்கேற்றதே இதற்கு காரணம் என, தெரிந்தது.

இதையடுத்து, டில்லி முதல்வர், கெஜ்ரிவால் உத்தரவுப்படி, தப்லிகி ஜமாத் தலைவர், மவுலானா சாத் கந்தால்வி மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர். டில்லியில், தப்லிகி ஜமாத் தலைமை அலுலகத்தில், ஊரடங்கு உத்தரவை மீறி தங்கியிருந்த, 250 வெளிநாட்டினர் உட்பட, 2,300க்கும் அதிகமானோர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இந்த மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டினர் பற்றி, மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணை மேற்கொண்டது.

இதில், பல மாநிலங்களில், மசூதிகளிலும், மத அமைப்புகளின் அலுவலகங்களிலும் சட்ட விரோதமாக வெளிநாட்டினர் பலர் தங்கியிருந்து தெரியவந்தது.இந்நிலையில், டில்லி மாநாட்டில், பங்கேற்ற, 2,550 வெளிநாட்டினரை கருப்பு பட்டியலில் வைக்க, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இவர்கள், அமெரிக்கா, பிரிட்டன், மலேசியா, இந்தோனேசியா உட்பட, 40 நாடுகளை சேர்ந்தவர்கள். இவர்கள், இந்தியாவுக்கு வர, 10 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
05-ஜூன்-202023:29:53 IST Report Abuse
Tamilan இவர்கள் வேறு பாஸ்போர்ட்டிலோ அல்லது இவர்களைப்போல் வேறு ஒரு 2500 பேரோ கிடைக்காமலா போய்விடப்போகிறார்கள் ?. இருப்பினும், இந்த நடவடிக்கை அவசியமான ஒன்று .
Rate this:
Cancel
Ayappan - chennai,இந்தியா
05-ஜூன்-202022:59:33 IST Report Abuse
Ayappan Great job by modiji
Rate this:
Cancel
IYER AMBI - mumbai,இந்தியா
05-ஜூன்-202018:45:19 IST Report Abuse
IYER AMBI பத்து வருடம் கழித்து தீர்ப்பு வழங்கி நியாயம் செய்தவர்களுக்கு நன்றி சொல்ல கட்டாயம் வருவார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X