முழு சம்பளம் வழங்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது - சுப்ரீம் கோர்ட்

Updated : ஜூன் 05, 2020 | Added : ஜூன் 05, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement

புது டில்லி: ஊரடங்கு காலத்தில் தங்கள் ஊழியர்களுக்கு முழு சம்பளம் வழங்க முடியாத நிறுவனங்கள் மீது கட்டாய நடவடிக்கை கூடாது என்ற மே 15 உத்தரவை, ஜூன் 12 வரை சுப்ரீம் கோர்ட் நீட்டித்துள்ளது.latest tamil newsமத்திய உள்துறை அமைச்சகம் மார்ச் 29-ல் தனது சுற்றறிக்கையில், அனைத்து நிறுவனங்களும் கொரோனா ஊரடங்கு காலத்திலும் தங்கள் தொழிலாளர்களுக்கு முழு சம்பளம் வழங்க வேண்டும் என்றது. மேலும், சவாலான சூழ்நிலைக்கு மத்தியில் பணியாளர்களை பணியில் இருந்து நீக்கவோ அல்லது அவர்களின் சம்பளத்தை குறைக்கவோ வேண்டாம் என்று முதலாளிகளுக்கு அறிவுறுத்துமாறு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை செயலாளர் மாநிலங்களின் தலைமை செயலாளர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்த வழிகாட்டுதல்களுக்கு எதிராக சிறு தொழில் உற்பத்தியாளர்கள் சங்கம் உள்ளிட்ட சிலர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதில் ஊரடங்கின் போது தங்கள் ஊழியர்களுக்கு முழு சம்பளம் வழங்க முடியாத நிறுவனங்கள் மற்றும் முதலாளிகள் மீது எந்தவொரு கட்டாய நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று சுப்ரீம் கோர்ட் மே 15 அன்று அரசாங்கத்திற்கு உத்தரவிட்டது. வியாழனன்று மீண்டும் விசாரணைக்கு வந்த இம்மனுவை வீடியோ கான்பிரன்சிங் மூலம் நீதிபதிகள் விசாரித்தனர்.

தொழில் தகராறுகள் சட்டத்தின் சில விதிகள் செயல்படுத்தப்படாத போது, ஊழியர்களுக்கு 100 சதவீத சம்பளம் வழங்காததற்காக முதலாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளதா என்று மத்திய அரசிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் தொழிலாளர்கள் சம்பளமின்றி இருக்கக்கூடாது என்ற கவலை உள்ளது, அதே சமயம் தொழில்துறையினருக்கு பணம் செலுத்த முடியாத சூழ்நிலை இருக்கலாம், எனவே சமநிலை தேவைப்படுகிறது என்றனர்.


latest tamil newsஊரடங்கின் 54 நாட்கள் சம்பளத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள முதலாளிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையில் சில பேச்சுவார்த்தைகள் நடக்க வேண்டும். உள்துறை அமைச்சக அறிவிப்பின் செல்லுபடி குறித்து 3 நாட்களில் பதிலளிக்குமாறும் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞருக்கு நீதிபதிகள் அவகாசம் வழங்கினர்.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheran Perumal - Radhapuram,இந்தியா
05-ஜூன்-202013:46:43 IST Report Abuse
Cheran Perumal சம்பளம் கொடுக்க முடிந்த முதலாளிகளும் இதை ஒரு சாக்காக வைத்து கொடுக்காமல் இருப்பதை காண முடிகிறது. பத்து லட்ச ரூபாய் மதிப்புக்கு மேல் மதிப்புள்ள கார் வைத்திருப்பவர்களை ஆராய்ந்து அவர்கள் தொழிலாளிகள் சம்பளத்தை பாக்கி வைத்துள்ளார்களா என்று பார்க்கலாம்.
Rate this:
Cancel
முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா
05-ஜூன்-202012:03:14 IST Report Abuse
முடியட்டும் விடியட்டும் ::  தமிழன் எனக்கொரு சந்தேகம் 20.5 லட்சம் கோடி யில் யறைக்காவது ஒரு பைசா MONITARY யாக வந்ததை யாரேனும் இருந்தால் சொல்லுங்கள் ப்ளீஸ்
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
05-ஜூன்-202014:28:38 IST Report Abuse
madhavan rajanIf you are not aware of Industries and its functioning such questions will arise. The present scheme is mainly to revive the industries which will give employment and need not wait for capital appreciation to start their industries. When they approach the banks they will sanction loans to them and will keep it at their disposal. For purchase of raw materials and production expenses the industries will utilise such loan amount. Nobody will get cash in their hands and with that they cannot go to tasmac and enjoy. It is mainly for the revival of the industries which has a bearing on Indian economy....
Rate this:
முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா
05-ஜூன்-202014:46:35 IST Report Abuse
முடியட்டும் விடியட்டும் ::  தமிழன்i think as per your statement it is only useful to my grandson time thanku...
Rate this:
Cancel
ponssasi - chennai,இந்தியா
05-ஜூன்-202010:52:38 IST Report Abuse
ponssasi ஊழியர்களின் வேதனை புரிகிறது, முதலாளிகளின் வேதனை அதைவிட பெரிது, நான் நிறைய முதலாளிகளை பார்த்திருக்கிறேன் மாத இறுதியில் அவர்கள் படும்பாடு அவர்களுக்கே உரியது, ஊதியம் கொடுக்க, மின்சாரம், கொள்முதல், இதர செலவினங்கள் சமாளிக்க, வங்கிகளை நாடுவதும், வரவேண்டிய தொகையை வசூலிப்பதிலும் மாதத்தில் பாதி நாட்கள் அவர்களால் தூங்கவே முடியாது இது தான் நிஜம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X