பொது செய்தி

இந்தியா

சிதம்பரம் ஜாமினை எதிர்த்த சி.பி.ஐ., மனு தள்ளுபடி

Updated : ஜூன் 06, 2020 | Added : ஜூன் 05, 2020 | கருத்துகள் (30)
Share
Advertisement
சிதம்பரம் ஜாமினை எதிர்த்த சி.பி.ஐ., மனு தள்ளுபடி

புதுடில்லி:காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், சிதம்பரம், நிதி அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, 2007ல், ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனத்துக்கு, வெளிநாட்டில் இருந்து, 305 கோடி ரூபாய், அன்னிய முதலீடு பெறப்பட்டது. இதற்கு, சிதம்பரம் முறைகேடாக அனுமதி அளித்ததாகவும், இதன் மூலம், அவரும், அவரது மகன் கார்த்தியும் ஆதாயம் அடைந்ததாக, 2017ல், சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கு தொடர்பாக, கடந்த ஆண்டு ஆகஸ்டில், சி.பி.ஐ., அதிகாரிகள், சிதம்பரத்தை கைது செய்தனர். அவர், டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். சி.பி.ஐ., தாக்கல் செய்த வழக்கில், கடந்த ஆண்டு, அக்டோபர், 22ல், சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்கி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.சிதம்பரத்துக்கு வழங்கப்பட்ட ஜாமினை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், சி.பி.ஐ., தரப்பில், சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு, நீதிபதிகள் பானுமதி, ஏ.எஸ்.போபண்ணா ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், கடந்த, 2ம் தேதி, விசாரணைக்கு வந்தது. அப்போது, 'கடந்த ஆண்டு வழங்கப்பட்ட ஜாமினை, மறு பரிசீலணை செய்ய வேண்டிய அவசியம் இல்லை' என தெரிவித்த நீதிபதிகள், சி.பி.ஐ., தாக்கல் செய்த மனுவை, தள்ளுபடி செய்தனர். இந்த தகவல், உச்ச நீதிமன்ற அதிகாரபூர்வ இணையதளத்தில், நேற்று வெளியிடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GMM - KA,இந்தியா
05-ஜூன்-202020:00:55 IST Report Abuse
GMM உடம்பின் நுரை ஈரல் போன்றது நாட்டின் நீதிமன்றம். ஈரல் கெட்டு விட்டால் மனித உடல் நிலையை மருத்துவர் கணித்து விடுவர். CBI உயரிய புலனாய்வு அமைப்பு. அரசியல் இருக்கும். இருப்பினும் அதன் மனுவை நீதிமன்றம் ஏற்று இருக்க வேண்டும். அனைத்து நீதிமன்றங்களும் தன்னை கேள்வி கேட்க முடியாத உயரிய அமைப்பு என ஆக்கி கொண்டன. இதன் பலன் வக்கீல்களுக்கு நன்கு பயன்படுகிறது. பல வக்கீல்கள் குற்றவாளிக்கு நன்கு உதவி வருகின்றனர். அரசு நிர்வாகத்தில் உதவியாளர் முதல் IAS வரை அனைவருக்கும் அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. அரசு நிர்வாகத்தால் வக்கீல் மனுக்களை சரி செய்ய வேண்டிய கட்டாயம்.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
05-ஜூன்-202018:22:50 IST Report Abuse
RajanRajan அண்ணாவை பாதுகாப்பா வச்சுக்கிறது உங்க பொறுப்பு ஜட்ஜ் சாமிகளா இந்திய நாட்டின் பொருளாதாரத்தை கட்டி காத்த மேதையை சட்டம் பாதுகாக்க தவறலாமா????
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
05-ஜூன்-202017:59:53 IST Report Abuse
Endrum Indian அப்போ அநீதிமன்றத்தில் இன்னும் 25 வருடம் வரை காங்கிரஸ் நியமித்த அநீதிபதிகள் அப்போ தீர்ப்பும் அவர்களுக்கு ஆதரவாகவே வரும். பேஷ் பேஷ் இதுவல்லவோ சோனியா காங்கிரஸ் பக்தி.
Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
06-ஜூன்-202000:10:15 IST Report Abuse
தமிழ்வேல் அப்போ எப்புடி ஜெயிலுக்குப் போனாரு ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X