பொது செய்தி

இந்தியா

தொழிலாளர்களை திரும்ப வரவழைக்க விமான டிக்கெட்

Updated : ஜூன் 05, 2020 | Added : ஜூன் 05, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
ஐதராபாத்: போதிய வேலை ஆட்கள் இல்லாமல் திணறும் கட்டுமான நிறுவனங்கள், விமான டிக்கெட்டுகளை எடுத்துக்கொடுத்து, ஊர் சென்றுள்ள தொழிலாளர்களை அழைத்துவரும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல, மத்திய அரசு சிறப்பு ரயில்களை இயக்கியது. இதன்மூலம், லட்சக்கணக்கான தொழிலாளர்கள், சொந்த மாநிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
Plane Tickets, migrants, lockdown, coronavirus lockdown, hyderabad builders, hyderabad news, ஊரடங்கு, விமான டிக்கெட்,

ஐதராபாத்: போதிய வேலை ஆட்கள் இல்லாமல் திணறும் கட்டுமான நிறுவனங்கள், விமான டிக்கெட்டுகளை எடுத்துக்கொடுத்து, ஊர் சென்றுள்ள தொழிலாளர்களை அழைத்துவரும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.

புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல, மத்திய அரசு சிறப்பு ரயில்களை இயக்கியது. இதன்மூலம், லட்சக்கணக்கான தொழிலாளர்கள், சொந்த மாநிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்நிலையில், நாட்டில் கட்டுமான தொழிலுக்கு இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. எனினும், தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்றுள்ளதால், போதிய ஆட்கள் இல்லாமல் திணறும் கட்டுமான நிறுவனங்கள், அவர்களை மீண்டும் அழைத்துவரும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.


latest tamil news


இதுகுறித்து, கட்டுமான நிறுவனமான 'பிரஸ்டீஜ்' குழுமத்தின் துணைத் தலைவர் சுரேஷ் குமார் கூறியதாவது: கட்டுமான திட்டங்களை உரிய நேரத்தில் முடிக்கவேண்டும் என்பதே நிறுவனங்களின் இலக்காக உள்ளது. ஆனால், போதிய தொழிலாளர்கள் இல்லாததால், உரிய நேரத்தில் முடியாமல் போக வாய்ப்புள்ளது. எங்கள் கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களில், 2,300 தொழிலாளர்கள் முதலில் பணிபுரிந்தனர்.

ஆனால், இப்போது, 700 தொழிலாளர்கள் மட்டுமே உள்ளனர். இதனால், வசதிகளை செய்துகொடுத்து, தொழிலாளர்களை அழைத்துவரும் முயற்சிகளில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். எங்கள் 'கான்ட்ராக்டர்' ஒருவர், பாட்னாவில் உள்ள, 10 'கார்ப்பென்டர்களை', ஐதராபாதிற்கு அழைத்து வர, விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொடுத்துள்ளார். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sri Ra - Chennnai,இந்தியா
05-ஜூன்-202011:47:19 IST Report Abuse
Sri Ra இப்ப கதறுங்கடா ஒழுங்கா அவனுக்கு சாப்பாடு போட்டு இருந்த இந்த பிரச்சனை வந்து இருக்குமா
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
05-ஜூன்-202011:14:41 IST Report Abuse
Indhuindian தும்பை விட்டு வாலை பிடிக்கிறது இதுதான். வூரடங்கு போட்டவுடன் அவங்களுக்கு தேவையான சௌகரியங்களை செய்து கொடுக்க வேண்டியதானே. அப்போ முடிச்ச அவுக்காம இப்போ ஏதோ பெருசா விமான டிக்கெட் குடுக்கறேன்னு பீத்திக்கறதா
Rate this:
Suppan - Mumbai,இந்தியா
05-ஜூன்-202013:44:32 IST Report Abuse
Suppanஇந்த லாக்  டவுன் எவ்வளவு மாசம் இருக்கும்னு தெரியாது. அவர்களும்  துடிச்சாங்க ஊருக்குப் போகணும்னு.. ஊர்ல என்னமோ  பாலும் ஓடுற  மாதிரி.  ஊர்லேயும் இல்லாத கொரோனாவைப் பரப்பினாங்க. இந்த மூணு மாசம் அவங்கள வெச்சு இட வசதி  சோறு தண்ணி  கொடுப்பதை    விட விமான  டிக்கெட் குடுப்பது .செலவு கம்மிங்க. அவங்களுக்கும் விமானத்துல வந்தோம்னு கெத்து காமிக்கலாமே ...
Rate this:
Cancel
05-ஜூன்-202006:53:30 IST Report Abuse
ஆப்பு துக்ளக் தளர்வு - 2. ஆரம்பம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X