பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் இறப்பு விகிதம் குறைவு எப்படி? மத்திய குழு ஆய்வு

Updated : ஜூன் 05, 2020 | Added : ஜூன் 05, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
சென்னை: கொரோனா பரவல் உள்ள நிலையில், இறப்பு விகிதத்தை கட்டுப்படுத்தியது எப்படி என்பதை ஆய்வு செய்வதற்காக, மத்திய குழு, தமிழகம்வந்துள்ளது.மத்திய தொழில் மற்றும் உள்வர்த்தக மேம்பாட்டுத்துறை இணை செயலர் ராஜேந்திர ரத்னு தலைமையில், ஜிப்மர் மருத்துவமனை டாக்டர்கள் அடங்கிய மத்திய குழுவினர், தமிழகம் வந்துஉள்ளனர்.இந்தக் குழுவினர், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு,
TN Corona Updates, TN Health,TN Fights Corona, Corona, TN Against Corona, TN Govt, coronavirus, Tamil Nadu, Covid 19,Stay Home, Quarantine, lockdown

சென்னை: கொரோனா பரவல் உள்ள நிலையில், இறப்பு விகிதத்தை கட்டுப்படுத்தியது எப்படி என்பதை ஆய்வு செய்வதற்காக, மத்திய குழு, தமிழகம்வந்துள்ளது.

மத்திய தொழில் மற்றும் உள்வர்த்தக மேம்பாட்டுத்துறை இணை செயலர் ராஜேந்திர ரத்னு தலைமையில், ஜிப்மர் மருத்துவமனை டாக்டர்கள் அடங்கிய மத்திய குழுவினர், தமிழகம் வந்துஉள்ளனர்.இந்தக் குழுவினர், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலுார், அரியலுார், விழுப்புரம் மாவட்டங்களில், மூன்று நாட்கள் ஆய்வு நடத்துகின்றனர்.


latest tamil news


சென்னையில், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, நேற்று ஆய்வு நடத்தினர். அவர்களிடம், மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவரித்தார். பின், மத்திய ஆய்வு குழுவின் தலைவர் ராஜேந்திர ரத்னு அளித்த பேட்டி: கொரோனா பாதிப்பு குறித்து ஆராய்ந்து, மத்திய அரசுக்கு அறிக்கை அளிப்பதற்காக வந்துள்ளோம். தமிழகத்தில் அதிகம் பாதிப்புள்ள ஏழு மாவட்டங்களில், ஆய்வு செய்ய உள்ளோம். இதற்கு முன் வந்த மத்திய குழுவினர், தமிழகத்தில் எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது, பாதிப்பை எவ்வாறு கண்டறிகின்றனர் என்பதை ஆய்வு செய்தனர்.

நாங்கள், கொரோனா சிகிச்சை முறை, அறிகுறி உள்ளவர்களை கண்டறிந்து சோதனை செய்வது, தனிமைப்படுத்தும் நடவடிக்கை, கட்டுப்பாடு பகுதிகளின் கள நிலவரம், மக்களிடையே விழிப்புணர்வு மற்றும் இறப்பு விகிதம் கட்டுப்படுத்தப்பட்டது எப்படி என்பதை ஆராய்ந்து, மத்திய அரசிடம் அறிக்கையாக அளிக்க உள்ளோம். தமிழகத்தில் கொரோனா பரவல் இருந்தாலும், பிற மாநிலங்களை விட, இறப்புவிகிதம் குறைவு. இதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதை ஆராய்ந்து, பிற மாநிலங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் கூறுகையில், ''அரசின் வழிகாட்டுதல்களை மதிக்காதவர்களிடம் இருந்து, 65 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில், கொரோனா தடுப்பு நடவடிக்கையை சரியாக பின்பற்றாதவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Puratchi Thondan (a) Senathipathy - Chennai,இந்தியா
05-ஜூன்-202019:27:36 IST Report Abuse
Puratchi Thondan (a) Senathipathy 105 ருபாய் சரக்கடித்தால் உலகத்தில் உள்ள எந்த வைரஸ்ம் கிட்டவே நெருங்காது ஏனெனில் அந்த சரக்கில் ஏற்கனவே எல்லாம் உள்ளது
Rate this:
Cancel
unmaitamil - seoul,தென் கொரியா
05-ஜூன்-202013:44:37 IST Report Abuse
unmaitamil சிலருக்கு தன்மீதே நம்பிக்கை இருக்காது. அதனால் மற்றவர்களையும் நம்ப மறுப்பார்கள். யாரையும் நம்ப மாட்டார்கள். இது ஒரு மனோ வியாதி. கேரளாவில் காரோண உயிர்பலி குறைவு என்றால், இங்கு அதை முழுவதும் நம்பி, அவர்களை அளவுக்கு அதிகம் பாராட்டுவார்கள். நம் தமிழ்நாட்டில் உயிர்பலி குறைவு என்றால், நம் அரசை அதை நம்ப மாட்டார்கள். காரணம் திராவிட கொள்கை அப்படி. யார் நல்லது செய்தாலும், நல்லதை பாராட்டுவோம்.
Rate this:
Cancel
05-ஜூன்-202011:03:29 IST Report Abuse
Janarthanan (குடும்ப ஆட்சிக்கு முடிவுரை எழுத வேண்டும்) சாவுகளை வைத்து அரசியல் செய்யும் கூட்டத்திற்கு ஒரே வருத்தம்
Rate this:
05-ஜூன்-202012:47:26 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு idhu thaan thiravidam, thiravidan palasi /puthisali...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X