பிரதமர் பாராட்டிய மதுரை மோகன் மகள் நேத்ரா ஐ.நா. நல்லெண்ண தூதராக தேர்வு

Updated : ஜூன் 05, 2020 | Added : ஜூன் 05, 2020 | கருத்துகள் (50) | |
Advertisement
மதுரை: பிரதமரால் பாராட்டப்பட்ட மதுரை மோகன் மகள் நேத்ரா ஐ.நா. நல்லெண்ண தூதராக தேர்வாகியுள்ளார்.மதுரையில் மேலமடையைச் சேர்ந்த சலூன் கடைக்காரர் மோகன் (47) ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 5 கிலோ அரிசி, காய்கறிகள், பலசரக்கு சாமான்கள் மற்றும் சமையல் எண்ணெய் போன்றவற்றை நிவாரணமக வழங்கினார். இதற்காக தனது மகள் நேத்ராவின் படிப்புக்காக சேமித்து வைத்த ரூ.5 லட்சத்தை
coronavirus, Madurai, salon owner, lockdown, charity, PM Modi,  Corona, Covid-19, Curfew, Lockdown in india, praise

மதுரை: பிரதமரால் பாராட்டப்பட்ட மதுரை மோகன் மகள் நேத்ரா ஐ.நா. நல்லெண்ண தூதராக தேர்வாகியுள்ளார்.

மதுரையில் மேலமடையைச் சேர்ந்த சலூன் கடைக்காரர் மோகன் (47) ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 5 கிலோ அரிசி, காய்கறிகள், பலசரக்கு சாமான்கள் மற்றும் சமையல் எண்ணெய் போன்றவற்றை நிவாரணமக வழங்கினார். இதற்காக தனது மகள் நேத்ராவின் படிப்புக்காக சேமித்து வைத்த ரூ.5 லட்சத்தை செலவிட்டுள்ளார்.

மோகனின் மகள் நேத்ரா, தற்போது ஒன்பதாவது வகுப்பு படித்து வருகிறார். ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்ற கனவுடன் படித்து வருவதாக அவர் தெரிவித்திருந்தார்.


latest tamil news
இக்கட்டான நிலையில் மோகன் உதவிய சம்பவம் அறிந்த பிரதமர் மோடி, மன் கீ பாத் நிகழ்ச்சியின்போது மோகனுக்கு பாராட்டு தெரிவித்தார். இந்நிலையில் மகள் படிப்புக்காக சேமித்து வைத்திருந்த ரூ.5 லட்சத்தை ஏழைகளுக்காக வழங்கியதை பாராட்டி, ஐ.நா-வின் வளர்ச்சி மற்றும் அமைதி சார்பாக ஏழை மக்களின் நல்லெண்ணத் தூதராக நேத்ரா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மாநாட்டில் வறுமை ஒழிப்பு தொடர்பாக இவர் பேசவும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
08-ஜூன்-202016:48:55 IST Report Abuse
Thiagarajan Kodandaraman இன்றைய முரசொலியில் பாராட்டி வாழ்த்தி உள்ளார்கள் இந்த வீராங்கனையை .. பாராட்டு தெரிவித்த தீ மு கா தலைவருக்கு நாம் NANDRI SOLVOM
Rate this:
Cancel
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
06-ஜூன்-202000:41:54 IST Report Abuse
Ramesh R விளம்பரம் நல்ல வெகுமதியை கொடுத்தது
Rate this:
Cancel
adalarasan - chennai,இந்தியா
05-ஜூன்-202022:34:55 IST Report Abuse
adalarasan இந்த இளம்வயதில், மென்மையான, எண்ணங்கள் கொண்ட ,,இந்த பெண்மணியை மனதார வாழ்த்துகிறோம்பெற்றோர்களையும்தான்./? ஆனால் அதே சமயம், பெரும் பணக்காரர்களாக,, அரசியலில் சம்பாதித்து,பணக்காரர்களாக, சொத்துக்களை சேர்த்து திரியும் ,குடும்பக்களுக்கு, மற்றவர்களுக்கு ஏழை எளியவர்களுக்கு, சொந்த பணத்திலிருந்து தர மனம் வரவில்லையேகட்சி பணத்தை//….?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X