புலம்பெயர் தொழிலாளரை 15 நாளில் சொந்த ஊருக்கு அனுப்ப உத்தரவு

Updated : ஜூன் 05, 2020 | Added : ஜூன் 05, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
உச்சநீதிமன்றம், சுப்ரீம்கோர்ட், புலம்பெயர் தொழிலாளர், மத்திய அரசு, மாநில அரசு, Coronavirus, Corona, Covid-19, Curfew, Lockdown, sc, Supreme Court, states, migrant workers, state govt,

புதுடில்லி : புலம்பெயர் தொழிலாளர்களை 15 நாட்களுக்குள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். பலர் நடந்தும், சைக்கிளிலும், லாரிகள் என ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்கின்றனர். புலம்பெயர் தொழிலாளர்களுக்காக மத்திய அரசு சிறப்பு ரயில்இயக்கி வருகிறது.
புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.


latest tamil news




இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, புலம் பெயர் தொழிலாளர்களுக்காக ஜூன் 3 வரை 4,228 சிறப்பு ஷராமிக் ரயில்கள் இயக்கப்பட்டன. அதில் 57 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். 41 லட்சம் பேர் சாலை மார்க்கமாக சொந்த ஊர் திரும்பியுள்ளனர். இதன் மூலம் 1 கோடி பேர் சொந்த ஊருக்கு திரும்பியதாக தெரிவித்தார்.

இதனையடுத்து அடுத்த 15 நாட்களுக்குள் புலம்பெயர் தொழிலாளர்களை, சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
arudra1951 - Madurai,இந்தியா
06-ஜூன்-202008:57:51 IST Report Abuse
arudra1951 எடப்பாடியிடம் சொல்லிக் கொண்டு தமிழ்நாட்டுக்குள் வந்தார்களா
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
05-ஜூன்-202021:09:33 IST Report Abuse
RajanRajan . இன்னா நடக்குது நாட்டிலேன்னு.
Rate this:
Cancel
அன்பு - தஞ்சை,இந்தியா
05-ஜூன்-202019:26:32 IST Report Abuse
அன்பு எப்பவோ போட வேண்டிய உத்தரவை, இப்போது போடுகிறது. சுப்ரிம் கோர்ட் லேட்டா வரும் போலீஸ். ஒரு பயனும் கிடையாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X