அதிகாரியை செருப்பால் அடித்து துவம்சம் செய்யும் பா.ஜ.,பெண் உறுப்பினர்

Updated : ஜூன் 05, 2020 | Added : ஜூன் 05, 2020 | கருத்துகள் (36)
Share
Advertisement

புதுடில்லி: ஹரியானா மாநிலத்தில் அரசு அதிகாரியை பா.ஜ., பெண் உறுப்பினர் செருப்பால் அடித்து துவம்சம் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.



latest tamil news




ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் சோனாலி போகட். இவர் டிக்டாக் மூலம் பிரபலம் ஆனவர். கடந்த 2019 ம் ஆண்டில் பா.ஜ., சார்பில் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து நிறுத்தப்பட்டார். தேர்தலில் தோல்வியை தழுவினார். தொடர்ந்து பல்வேறு பிரச்னைகளில் சிக்கி வரும் தற்போதும் பிரச்னையில் சிக்கி உள்ளார்.

சோனாலி போகட் ஹிசார் மாவட்டத்தில் உள்ள ஆதம்பூர் உழவர் சந்தையில் ஆய்வு மேற்கொண்டிருந்தார். அப்போது விவசாயிகளின் புகார் பட்டியலுடன் வேளாண் உற்பத்தி சந்தை குழு உறுப்பினர் சுல்தான்சிங்கிடம் புகார் அளித்தார். இதுகுறித்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் அரசு அதி்காரியான சுல்தான்சிங்கை செருப்பால் அடித்து துவம்சம் செய்தார் சோனாலி போகாட். அப்பகுதிக்கு போலீசார் வந்தும் சோனாலி போகட் செயலை தடுக்கவில்லை. இச்சம்பவம் குறித்த வீடியோ வைரலானது.


latest tamil news



இது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா டுவிட்டரில் அரசு ஊழியராக இருப்பது குற்றமா? மாநில முதல்வர் கட்டார் சோனாலி போகாட் மீது நடவடிக்கை எடுப்பாரா என பதிவிட்டுள்ளார்.

முன்னதாக தேர்தலின் போது பாரத் மாதா கி ஜெய் என்று சொல்லுங்கள் என கூறியவர் அப்படி சொல்ல முடியாதவர்கள் அவர்களின் வாக்குகளுக்கு எந்த மதிப்பும் இல்லை என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அது மட்டுமல்லாது தனது சகோதரி, மற்றும் மைத்துனர் ஆகியோர் தன்னை தாக்கி அச்சுறுத்துவதாக போலீசில் புகார் அளித்து பத்திரிகைகளில் தலைப்பு செய்தியானார்.

Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
08-ஜூன்-202017:09:21 IST Report Abuse
J.V. Iyer அம்மணி, நீங்கள் உங்கள் கணவரை அடிப்பதுடன் நிறுத்திக்கொள்ளவும். மற்றொருவரின் கணவரை அடிக்க அவர் மனைவிக்கே உரிமை உள்ளது. இது உரிமை மீறும் செயல். இந்த கால பெண்களுக்கு நிறைய துணிச்சல் வந்துவிட்டது.
Rate this:
Cancel
Raj - nellai,இந்தியா
06-ஜூன்-202015:36:11 IST Report Abuse
Raj உண்மையான பீஜேபிகாரி என்பதை நிரூபித்து விட்டாள். பரத் மாத கி ஜே
Rate this:
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
06-ஜூன்-202011:30:14 IST Report Abuse
Rafi ரவுடியிசத்திற்கு அக்கட்சியின் பெண்களும் விதிவிலக்கல்ல. காவலர்கள் வழக்கம் போல் வேடிக்கை பார்த்துள்ளார்கள். அரசு எப்படியோ அதன்படி தான் காவலர்கள் என்பது மீண்டும் நிரூபணம் ஆகின்றது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X