மஹா.,வில் புயல் நிவாரண நிதி ; முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு

Updated : ஜூன் 05, 2020 | Added : ஜூன் 05, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

மும்பை : மஹாராஷ்டிராவில் புயல் நிவாரண நிதியாக ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டதாக அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.



latest tamil news



அரபிக்கடலில் உருவான நிசர்கா புயல் மஹாராஷ்டிராவின் அலிபாக் மாவட்டத்தில் கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகம் மணிக்கு 100 முதல் 115 கி.மீ வேகத்தில் வீசியது. இந்த புயலின் வேகத்தால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளும் சேதமடைந்துள்ளன. அதிகபட்சமாக ராய்காட் மாவட்டத்தில் அதிகமாக சேதமடைந்துள்ளது. இது தொடர்பாக அம்மாநில முதல்வர் உத்தவ், புயலால் சேதமான பகுதிகளை பார்வையிட்டார். ராய்காட்டில் புயலால் சேதமடைந்த பகுதிகளில் பாதிப்பு குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டதாகவும், அவசர நிவாரண நிதியாக ரூ.100 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அறிவித்துள்ளார்.


latest tamil news



புயல் சேதங்களை பார்வையிட்ட முதல்வர் உத்தவ் உடன் அமைச்சர்கள் ஆதித்யா தாக்கரே, அஸ்லம் ஷேக் என பலரும் சென்று பார்வையிட்டனர். முன்னதாக புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் கிராம மக்களுக்கு விரைவான உதவி வழங்கப்படுவதை உறுதிசெய்ய, 2 நாட்களுக்குள் புயலால் எற்பட்ட சேதங்கள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் புயலால் பலியான 6 பேரின் குடும்பத்துக்கு தலா 4 லட்சம் நிதி வழங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundarsvpr - chennai,இந்தியா
05-ஜூன்-202021:32:13 IST Report Abuse
sundarsvpr நல்ல பருவ மலை பெய்தும் ஆறு ஏழு மாதங்கள் கடந்து வறட்சியையும் காண்கிறோம். காரணம் ஆணை கட்டி நீரை தேக்குகிறோம். இதன் சுற்றுப்புறம் மட்டும் நிலத்தடி நீர் உயரும். இரண்டாவது பூமியில் விழும் நீர் ஓடையில் சேரும் அமைப்பு இல்லை. நதிநீர் வாய்க்கால் கண்மாய் மூலம் குளம் குட்டை ஏரி களுக்கு செல்லும் அமைப்பு இல்லை. இதனால் பரவலாக நிலத்தடி நீருக்கு வாய்ப்பு இல்லை. நீர்ப்பாசன திட்டம் மாற்றம் தேவை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X