சவுதியில் 2,591 பேருக்கு கொரோனா

Updated : ஜூன் 05, 2020 | Added : ஜூன் 05, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

ரியாத் : கொரோனா பாதிப்பு அதிகரித்து சவுதியில் கடந்த 24 மணிநேரத்தில் 2,591 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். 31 பேர் பலியாகினர் என அந்நாட்டு சுகாதாரதுறை தெரிவித்தது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் சவுதி அரேபியாவில் சற்று அதிகரித்து வருகிறது. நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசும் பல்வேறு கட்டங்களாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்கிறது. இது தொடர்பாக அந்நாட்டின் சுகாதாரதுறை கூறுகையில், சவுதியில் கடந்த 24 மணிநேரத்தில் (ஒரே நாளில்) மேலும் 2,591 பேருக்கு நோய் தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 95,748 ஆக அதிகரித்தது. மேலும் நேற்று 31 பேர் நோய் தொற்றால் பலியாகினர். தொடர்ந்து இதுவரை சவுதியில் 642 பேர் பலியாகினர்.


latest tamil news



சவுதியில் 1,651 பேர் முழுமையாக குணமடைந்தனர். நாட்டில் இதுவரை குணமடைந்தவர் களின் எண்ணிக்கை 70,616 ஆக உயர்ந்தது. நோய் பாதிக்கப்பட்டவர்களில் ரியாத்தில் 719 பேர், ஜெட்டாவில் 459 பேர், மற்றும் தீவிர சிகிச்சையில் 1,412 பேர் உள்ளனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
06-ஜூன்-202013:56:21 IST Report Abuse
Rafi இந்த நோய்த்தொற்றில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது வெளிநாட்டினர், அரசு உலகம் உண்மையில் வியக்கும் வண்ணம் உயர் தர சிகிச்சை வழங்கி வருகின்றது. இறப்பு விகிதம் மிகவும் குறைவு. நூற்றைம்பது பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் மரணம் ஏற்படுகின்றது. தினமும் ட்ரிப் மற்றும் நோய்யெதிர்ப்பு மருந்துகளும் உயர்தரமான உணவுகள், மருத்துவர்களின் கனிவான பேச்சுக்கள், பொழுது போக்கிற்கு டிவி நெட் வசதிகள் செய்து கொடுத்துள்ளதாகவும் சிகிச்சை பெற்று வரும் நண்பர் தெரிவித்தார், நோயிலிருந்து விடுபட்டுவிட்டதாகவும், இரண்டு தினங்களில் வெளியில் வந்துவிடுவேன் என்றும் சொன்னார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X