பொது செய்தி

இந்தியா

அத்தியாவசிய பொருட்கள் சட்ட திருத்தத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்

Updated : ஜூன் 05, 2020 | Added : ஜூன் 05, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி: விவசாயிகளின் வருவாயை பெருக்கும், அத்தியாவசிய பொருட்கள் சட்ட திருத்தத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.விவசாயிகளின் நலனுக்காக 'ஒரு நாடு ஒரே சந்தை'யை ஏற்படுத்தும் வகையில் அத்தியாவசிய பொருட்களுக்கான சட்டத்தில் திருத்தத்தை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்தது. இதற்கு மத்திய அமைச்சரவையும் சில நாட்களுக்கு முன்
President,Ram Nath Kovind, promulgated, Farmers,Ministry of Agriculture, Farmers Welfare, ஜனாதிபதி,ராம்நாத் கோவிந்த்,  ஒப்புதல்

புதுடில்லி: விவசாயிகளின் வருவாயை பெருக்கும், அத்தியாவசிய பொருட்கள் சட்ட திருத்தத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

விவசாயிகளின் நலனுக்காக 'ஒரு நாடு ஒரே சந்தை'யை ஏற்படுத்தும் வகையில் அத்தியாவசிய பொருட்களுக்கான சட்டத்தில் திருத்தத்தை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்தது. இதற்கு மத்திய அமைச்சரவையும் சில நாட்களுக்கு முன் ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், இச்சட்டத்திருத்தத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதனையடுத்து இச்சட்டம் உடனடியாக அமலானது.


latest tamil news


அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தை மாற்றுவதற்கான முயற்சிகள் கடந்த காலங்களிலும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவை வெற்றி பெறவில்லை. இந்நிலையில், இச்சட்டத்தை பிரகடனப்படுத்தியதன் மூலம் விவசாயிகளின் நலனுக்காக, பல விவசாய பொருட்கள் இச்சட்டத்தின் வரம்பிலிருந்து விலக்கப்படும். விவசாயிகளின் பணிகள் எளிமையாக்கப்படுவதோடு அவர்களின் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும்.

எண்ணெய் வித்துகள், சமையல் எண்ணெய், வெங்காயம் மற்றும் உருளை ஆகியவவை அத்தியாவசிய பொருட்களில் இருந்து விலக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் விவசாயிகள் பெரிதும் பயனடைவார்கள்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
06-ஜூன்-202010:16:58 IST Report Abuse
Lion Drsekar ஒவ்வொரு ஆண்டும் பத்மஸ்ரீ விருதுகள் வழங்குவது இந்த ஆண்டு கொரோனாவால் இல்லாமல் போய்வ்ட்டது இன்னமும் மூன்று ஆண்டுகள் இருக்கிறது என்று நினைக்கிறோம், அடுத்து திரு வெங்கையா நாயுடு இந்த இடத்துக்கு வருவார் ,,,, வந்தே மாதரம்
Rate this:
Cancel
Narayanan G - Chennai,இந்தியா
06-ஜூன்-202003:40:13 IST Report Abuse
Narayanan G அருமையான ஐடியா
Rate this:
Cancel
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
06-ஜூன்-202000:42:36 IST Report Abuse
Panneerselvam Chinnasamy சட்ட திருத்தம் படிப்பதற்கு நன்றாக இருக்கிறது. ஆனால் நடைமுறையில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் கமிசன் மண்டிகளுக்கும் இடையே போட்டி இருந்தால் மட்டுமே விவசாயி நன்மை பெறுவான். கமிசன் மண்டிகள் கார்ப்பரேட் நிறுவனத்தின் கையாளாக மாறினால் விவசாயிக்கு நாமமே. ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்கள் பொருட்களை விளைச்சல் காலத்தில் கம்மிவிலையில் வாங்கி வறட்சிக்காலத்தில் நல்ல விலைக்கு விற்று லாபம் பெற வாய்ப்புள்ளது. பொருட்கள் கெடாமல் பாதுகாக்க நவீன சேமிப்பு கிடங்குகள் வரும். பொருட்கள் கெட்டு வீணாவது குறையும். சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள். பெரும் நிறுவங்களுக்குள் ஆரோக்கியமான போட்டி இருக்கும் பட்சத்தில் பொதுமக்கள் பயன் பெறுவார்கள்.
Rate this:
Ram - ottawa,கனடா
06-ஜூன்-202011:19:08 IST Report Abuse
RamWhether farmer gets right price or not is the question, to what price corporate sells is not a question, that's their technique to earn. Everything , cannot be given to farmer...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X