கொரோனா சிகிச்சை செலவுக்கு, 'கிடுக்கிப்பிடி!'

Updated : ஜூன் 07, 2020 | Added : ஜூன் 05, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
கொரோனா சிகிச்சை செலவுக்கு, 'கிடுக்கிப்பிடி!'

புதுடில்லி:'கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மத்திய அரசின், 'ஆயுஷ்மான் பாரத்' காப்பீடு திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தின்படி சிகிச்சையளிக்க, தனியார் மருத்துவமனைகள் தயாராக உள்ளதா' என, உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சச்சின் ஜெயின் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:நாட்டில், பல தனியார் மருத்துவமனைகள், மத்திய அல்லது மாநில அரசுகளிடமிருந்து, சலுகை விலையில் பெற்ற நிலங்களில் தான் செயல்படுகின்றன. ஆனால், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில், இந்த மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிக்கின்றன. வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதில், தனியார் மருத்துவமனைகளில் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு, தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே தலைமையில், நீதிபதிகள், ஏ.எஸ். போபண்ணா, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தனியார் மருத்துவமனைகள் கூட்டமைப்பு சார்பில், மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி, சுகாதார அமைப்புகள் கூட்டமைப்பு சார்பில், மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே, மத்திய அரசு சார்பில், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோர் ஆஜராகினார்.


'வீடியோ கான்பரன்ஸ்'



'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக நடந்த இந்த விசாரணையின் போது, நீதிபதிகள் கூறியதாவது: மத்திய அரசிடம் இருந்தோ அல்லது மாநில அரசிடம் இருந்தோ, சலுகை விலையில் நிலம் பெற்ற தனியார் மருத்துவமனைகள், இந்த நெருக்கடியான நேரத்தில், குறிப்பிட்ட எண்ணிக்கை யில், கொரோனா நோயாளிகளுக்கு ஏன் இலவசமாக சிகிச்சை அளிக்கக் கூடாது?நாங்கள், அனைத்து தனியார் மருத்துவமனைகளிடமும், இந்த கேள்வியை முன்வைக்கவில்லை; பலன்பெற்ற மருத்துவமனைகளிடம் மட்டுமே கேட்கிறோம்.

அதோடு, தனியார் மருத்துவமனைகள், மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க தயாராக உள்ளனவா என்பதையும், தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.இவ்வாறு நீதிபதிகள் கூறினர். அப்போது, மனுதாரரும், வழக்கறிஞருமான சச்சின் ஜெயின் கூறுகையில், ''மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் வரையறுக்கப்பட்ட கட்டணத்தையே, அனைத்து தனியார் மருத்துவமனைகளும், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பெற வேண்டும். ''இந்த நேரத்தில், மத்திய அரசு, மக்களுக்கு ஆதரவாக இருக்கவேண்டும்; தனியார் மருத்துவமனைகள் நலனுக்காகச் செயல்படக்கூடாது,” என்றார்.


வருவாய் குறைவு



அப்போது, ஹரீஷ் சால்வே கூறுகையில், ''ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில், சிகிச்சை கட்டணம் மிகக் குறைவாக இருக்கிறது. கொரோனாவால், தனியார் மருத்துவமனைகளின் வருவாய், 60 சதவீதம் குறைந்து உள்ளது,'' என்றார்.முகுல் ரோகத்கி கூறுகையில், ''இந்த இக்கட்டான நேரத்தில், எந்த தனியார் மருத்துவமனையும், லாப நோக்கில் செயல்படவில்லை,'' என்றார்.

இதற்கு நீதிபதிகள், 'உங்கள் எண்ணம், நல்ல காரணத்துக்காக இருப்பது மகிழ்ச்சி. இந்த விவகாரம் தொடர்பாக, ஏற்கனவே ஒரு வழக்கு, மற்றொரு அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. 'இந்த வழக்கில், தனியார் மருத்துவமனைகள், தங்கள் விரிவான பதிலை, அடுத்த இரு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும். மத்திய அரசும், பதில் தாக்கல் செய்ய வேண்டும்' என, கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
06-ஜூன்-202015:06:12 IST Report Abuse
J.Isaac அனைத்து தனியார் மருத்துவ கல்வி நிறுவனங்கள், மருத்துவ மனைகள் அரசுடைமையாக்க வேண்டும். அப்படிப்பட்ட துணிவான முடிவு எடுக்கக்கூடிய அரசு தேவை.
Rate this:
Cancel
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
06-ஜூன்-202013:01:35 IST Report Abuse
கல்யாணராமன் சு. இந்த வழக்கு மிக தேவையானது. எல்லா தொழில்களும்தான் பாதிக்கப்பட்டுள்ளன. மருத்துவமனைகள் மட்டுமல்ல. அவைகளும் இந்த காலத்தில் மக்கள் சேவை ஒன்றை மட்டும்தான் பார்க்கவேண்டும்...... லாபக் கணக்கை அல்ல...........
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
06-ஜூன்-202010:54:22 IST Report Abuse
RajanRajan தனியார் மருத்துவமனை செவிலியர்கள் தனியார் கல்லூரி பணியாளர்களின் சம்பளம் சரிவர வழங்குவதில்லை. பெரும்பான்மை ஊழியர்களுக்கு நியமன கடிதம் வழங்குவதில்லை. எனவே அரசு தலையிட்டு வரைமுறை படுத்த வேண்டியது மிகவும் அவசியம். இங்கு தான் எதை எடுத்தாலும் தில்லு முல்லு தானே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X