அரசியல் செய்தி

தமிழ்நாடு

'இனியும் கைது தொடர்ந்தால்...' வேலுமணிக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

Added : ஜூன் 05, 2020 | கருத்துகள் (29)
Share
Advertisement
 'இனியும் கைது தொடர்ந்தால்...' வேலுமணிக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை; 'உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணியை விமர்சிப்பதற்காக, இனிமேலும், தி.மு.க.,வினர் கைது செய்யப்பட்டால், நானே கோவைக்கு வந்து, மக்களைத் திரட்டி, மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவேன்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

அவரது அறிக்கை:உள்ளாட்சி துறை அமைச்சராக மட்டுமல்லாமல், தன்னை, 'சூப்பர் முதல்வர்' போல நினைத்து, செயல்பட்டு வருபவர், அமைச்சர் வேலுமணி. கோவை தெற்கு மாவட்ட, தி.மு.க., பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், விவசாய அணி அமைப்பாளர் ராமமூர்த்தி உட்பட பலர், வேலுமணியின் அராஜகங்களை அம்பலப் படுத்தியதற்காக கைது செய்யப்பட்டு உள்ளனர்.

மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கார்த்திக், வடக்கு மாவட்ட செயலர் ராமச்சந்திரன், கோவை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி ஆகியோர் மீதும், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.வேலுமணி அடையாளம் காட்டுபவர்களை கைது செய்வதும், வழக்குப்பதிவு செய்வதும், கோவை மாநகர போலீசின் வேலையாக மாறி விட்டது.வேலுமணியை எதிர்த்து விமர்சிப்பதற்காக, போராடுவதற்காக, இனிமேலும், தி.மு.க.,வினர் கைது செய்யப்பட்டால், நானே கோவைக்கு வந்து, மக்களைத் திரட்டி, மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவேன்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

மீண்டு வருவார்!

தி.மு.க., தொண்டர்களுக்கு, ஸ்டாலின் எழுதிஉள்ள கடிதத்தில், 'ஜெ.அன்பழகன், கொரோனா பாதிப்பிலிருந்து, விரைவில் மீண்டெழுந்து வருவார். மக்கள் மன்றத்திலும், சட்டசபையிலும், அவர் அரும்பணி ஆற்றுவார்' என, கூறியுள்ளார்.

தி.மு.க., அறிக்கை
வெளிநாடுகளில், தமிழகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வேலை வாய்ப்பு இழந்துள்ளனர்.அவர்கள் அனைவரையும், தாயகம் அழைத்து வருவதற்கு ஏதுவாக, 'தமிழகத்திற்கு விமான சேவை வேண்டாம் என, அரசு அறிவித்துள்ள தடையை ரத்து செய்ய வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க., சார்பில், இளங்கோவன் வழக்கு தொடுத்திருக்கிறார். வெளிநாடுகளில் திண்டாடும் தமிழகத்தை சேர்ந்த அனைவரையும் மீட்பதற்கு, தி.மு.க., தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
08-ஜூன்-202003:46:10 IST Report Abuse
J.V. Iyer சப்பான் துணை முதல்வருக்கு நிறைய அதிகாரங்கள் உண்டு. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
07-ஜூன்-202005:44:20 IST Report Abuse
skv srinivasankrishnaveni எந்த ஒரு விiபிக்கும் கொரோனாவே வராதுய்யா அவ்ளோப்ரோடெக்டா இருக்கானுகப்போல முதியவர்கள் அண்ட் ஏழைகளேதான் மாட்டிண்டு தவிச்சு சாவுங்க சீனாலே யு எஸ் லே இத்தாலிலே யு கே லே எல்லாம் இந்தியாலேயும் சரி எந்தப்பெரியமனுசாளுக்கு வந்தது கொரோனா சொல்லுங்க ஏமாளிகள் அப்பாவி பொதுஜனம்களேதான்
Rate this:
Dubuk U - Chennai,இந்தியா
08-ஜூன்-202011:21:32 IST Report Abuse
Dubuk Upaththirikkai padithhu ninaivail vaiththirukkum pazhakam illaiyo? ippadi illai enil Google pannipparkkavum...
Rate this:
Cancel
unmaitamil - seoul,தென் கொரியா
06-ஜூன்-202023:28:52 IST Report Abuse
unmaitamil சொடலை.... தைரியம் இருந்தா, தில் இருந்தா கோவை போய் ஆர்ப்பாட்டம் பண்ணிப்பார். அடுத்தநாள் கொரோனாதான். உன் உடம்புக்கு தேறமாட்ட.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X