ஏழைகளுக்கு உதவும் 'டிஜிட்டல்' தொழில்நுட்பம்

Updated : ஜூன் 07, 2020 | Added : ஜூன் 06, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
ஏழைகளுக்கு உதவும் 'டிஜிட்டல்' தொழில்நுட்பம்

நியூயார்க்:''ஏழைகள் மற்றும் சமூகத்தின் அடித்தட்டில் உள்ள மக்களின் தேவைகளுக்கு தீர்வு காண டிஜிட்டல் தொழில்நுட்பம் அவசியம் என்பதை கொரோனா பிரச்னை நமக்கு உணர்த்தியுள்ளது'' என ஐ.நா. வின் இந்திய பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி பேசியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் இந்தியாவுக்கானநிரந்தர பிரதிநிதியாக தமிழகத்தைச் சேர்ந்த டி.எஸ்.திருமூர்த்தி பொறுப்பேற்றுள்ளார்.பாதிப்புஐ.நா. வின் தேசிய மேம்பாட்டு திட்டம் குறித்த ஆண்டு கூட்டத்தில் பங்கேற்ற அவர் பேசியதாவது:

கொரோனா வைரஸ் பரவலால் உலகம் முழுதும் சுகாதாரம் தொடர்பான பிரச்னை எழுந்து உள்ளது. பின் இது மிகப் பெரிய பொருளாதார பிரச்னையாக மாறியுள்ளது.இதனால் உலகம் முழுதும் உள்ள ஏழைகள் அடித்தட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கும் முன்னுரிமைப் படுத்துவதற்கும் 'டிஜிட்டல்' தொழில்நுட்பம் மிகவும் அவசியம் என்பதை கொரோனா பிரச்னை நமக்கு உணர்த்தியுள்ளது.

டிஜிட்டல் தொழில்நுட்பம் மட்டும் இல்லையென்றால் ஏழைகளின் பிரச்னைக்கு எப்படி தீர்வு கண்டிருக்க முடியும் என்பதை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.அவசியம்எனவே எதிர்காலத்தில் அனைத்து வகையான மேம்பாட்டு திட்டங்களுக்கும் டிஜிட்டல் தொழில் நுட்பத்தை பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.சமீபகாலமாக இந்தியாவில் மக்கள் சார்ந்த அனைத்து திட்டங்களிலும் டிஜிட்டல் தொழில்நுட்பம் முழுமையாக பயன்படுத்தப்படுகிறது.

இந்த நெருக்கடியான காலத்தில் அனைத்துநாடுகளுக்கும் இந்தியா பெருமளவில் உதவியுள்ளது. குறிப்பாக மருந்து பொருட்கள், பரிசோதனை கருவிகள், கொரோனா குறித்த தகவல் பரிமாற்றம் ஆகிய விஷயங்களில் பெரும்பாலான நாடுகளுக்கு இந்தியா உதவிக்கரம் நீட்டியுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-ஜூன்-202008:14:02 IST Report Abuse
ஆப்பு சரிதான். 2014 ல் 60 கோடி பேரு ரேஷன் வாங்குனாங்க. டிஜிட்டல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி 74 கோடி ரேஷன் கார்டுதாரர்களாக ஒசத்திட்டோம். அவிங்களுக்கு டிஜிட்டல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ரேஷன் வழங்குகிறோம். இன்னும் நாலு வருஷத்தில் 100 கோடி ரேஷன் கார்டுதாரர்கள் பயனடைவார்கள் என்று எதிர் பார்க்கிறோம். ஏழைகள் இல்லேன்னா, ஏழைப்பங்காளர் ஆட்சி எப்பிடி வர முடியும்?
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
06-ஜூன்-202007:40:30 IST Report Abuse
blocked user காங்கிரஸ் இதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும்.. போன் இல்லாதவர்கள் என்ன செய்வார்கள் - அவர்களுக்கு போன் கொடுக்கவேண்டும் என்று முரண்டு பிடிக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X